கமல் மீதிருக்கும் அந்த காதல் இன்னும் போகல.. நடிகையின் செயலால் ஷாக்கான ரசிகர்கள்

Published on: August 8, 2025
---Advertisement---

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து முத்திரை பதித்தவர் நடிகர் கமல். உலகநாயகன் என்ற இடத்தில் இருந்து தற்போது விண்வெளி நாயகனாக உயர்ந்து இருக்கிறார். சினிமாவில் அவருக்கு தெரியாத எந்த விஷயங்களும் இல்லை. அத்தனை நுணுக்கங்களையும் கற்று அறிந்தவர் கமல். குழந்தையாக இருக்கும் போது நடிக்க ஆரம்பித்து இன்று 70 வயது ஆகியும் அதே தெம்புடனும் புத்துணர்ச்சியுடன் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் கமல்.

நாளை அவருடைய நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்து அவர் பேசியது பெரும் சர்ச்சையாக மாறி சில பல பிரச்சனைகளை கடந்து இப்போதுதான் சமூகமான முடிவு கண்டறியப்பட்டுள்ளது. அதனால் நாளை எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் படம் வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது.

நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமலும் மணிரத்னமும் மீண்டும் இணையும் திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. கூடவே சிம்பு இந்த படத்தில் இருப்பது படத்திற்கு இன்னும் ஒரு பெரிய அளவில் ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் டிரைலர் வெளியாகி எக்கச்சக்க வரவேற்பையும் பெற்று இருக்கிறது. அதோடு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தக் லைஃப் பட குழு அவரவர் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். இந்த சந்திப்பு கூட்டத்தில் நடிகை வடிவுக்கரசியும் வந்திருந்தார். அவர் வெளியே வைக்கப்பட்டிருந்த கமலின் போஸ்டரை பார்த்து அவர் கன்னத்தை கொஞ்சுவதும் மூக்கை கிள்ளுவதும் கமலை ரசித்தவாறு பார்ப்பதும் என அந்த போஸ்டர் அருகிலேயே உட்கார்ந்து இருந்தார் வடிவுக்கரசி.

இத்தனை வயதாகியும் இன்னும் கமல் மீது இருக்கும் அந்த அன்பு இன்னும் குறையவில்லை என்பது அவருடைய செய்கையின் மூலம் நமக்கு தெரிகிறது. சிவப்பு ரோஜாக்கள் படத்தில் யாரும் எதிர்பாராத ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் வடிவுக்கரசி.


ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment