மகன் ஹீரோவானதும் வனிதா போட்ட எமோஷனல் பதிவு! அதுக்கு வந்த கமெண்ட்லதான் ட்விஸ்டே இருக்கு

by ராம் சுதன் |

இன்று வனிதா விஜயகுமார் போட்ட பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு பெரும் குணச்சித்திர நடிகராக இருப்பார் நடிகர் விஜயகுமார். இவருடைய மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகள்தான் வனிதா. இவருக்கு பிரீத்தா விஜயகுமார் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் என இரு சகோதரிகள் இருக்கிறார்கள்.

விஜயகுமார் தன்னுடைய முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளின் குழந்தைகளுடனும் பேரன் பேத்திகளுடனும் சந்தோஷமாக இருந்து வருகிறார். ஆனால் வனிதாவுடனான பிரச்சினை காரணமாக வனிதாவை மட்டும் வீட்டில் சேர்த்துக் கொள்வதில்லை .இதனால் வனிதா எல்லா பிரச்சினைகளையும் தாங்கிக் கொண்டு தன் மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ச்சியாக படவாய்ப்புகள் வர வனிதா இப்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக வனிதா ஆகாஷை பிரிய மகன் தந்தை கூடவே வாழ்ந்து வந்தார்,

இன்று அந்த மகன் தான் பெரிய ஆளாகி ஒரு புதிய படத்தில் ஹீரோவாகவும் மாறியிருக்கிறார். பிரபுசாலமன் இயக்கும் ஒரு புதிய படத்தில் வனிதா மகன் ஸ்ரீஹரி ஹீரோவாக நடிக்கிறார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் விழா சென்னையில் நடைபெற்றது.

அதற்கு வந்த விஜயகுமார் தன் பேரன் குறித்து பல தகவல்களை பகிர்ந்தார். இந்த நிலையில் வனிதா விஜயகுமாரும் தன் மகன் பற்றி தன்னுடைய இணையதள பக்கத்தில் எமோஷனலான பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அதில் ‘என் மகன் ஸ்ரீஹரி ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் ரஜினி சார் இதுக்கு ஒரு மெண்டராக இருப்பது தனக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது என்றும் இதை டைப் பண்ணும் போது என் கண்களில் கண்ணீர் வந்தது’ என்பது மாறி பதிவிட்டிருந்தார்.

இதற்கு ரசிகர்கள் பலர் தன்னலம் இல்லாதது தாயின் உள்ளம். கண்டிப்பாக உங்களை புரிந்து கொண்டு உங்கள் மகன் தேடி வருவார் என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Next Story