Categories: latest news

தனுஷுக்கு டஃப் கொடுக்கும் அதர்வா.. இதுதான் சரியான தருணம்! சக்கப் போடு போடும் ‘DNA’

எப்படியாவது சினிமாவில் ஒரு நல்ல அந்தஸ்தை பெற வேண்டும் என பல ஆண்டுகளாக போராடிக் கொண்டு வருபவர் நடிகர் அதர்வா. அவருடைய அப்பா முரளி 90களில் ஒட்டுமொத்த இதயங்களை தொட்டவர். இன்றுவரை முரளிக்கு என தனி ஃபேன்ஸ் இருக்கிறார்கள் .அவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் .அதிலும் குறிப்பாக அவரை ஒரு காதல் மன்னனாகத்தான் அனைவரும் பார்த்தனர். பெரும்பாலும் ஒருதலை காதலை மையப்படுத்தி வெளியான படங்களில் தான் அவர் நடித்திருப்பார். வாரிசு நடிகர்களை பொருத்தவரைக்கும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே உச்சத்தை அடைந்திருக்கின்றனர்.

மற்ற நடிகர்கள் நினைத்த இடத்தை அடைய முடியாமல் போராடி வருகிறார்கள். அப்படித்தான் அதர்வாவும். அவர் நடிப்பில் கடைசியாக நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் என்றால் இமைக்கா நொடிகள். அதுவும் நயன்தாரா லீடு ரோலில் நடித்திருப்பார். அதன் பிறகு வெளியான அதர்வாவின் படங்கள் சொல்லும்படியாக இல்லை. நீண்ட நாளுக்கு பிறகு அவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் டி என் ஏ. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா நடித்திருப்பார். படத்தின் கதைப்படி அதர்வாவுக்கும் நிமிஷாவுக்கும் குழந்தை பிறக்கின்றது.

பிறந்த சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை கடத்தப்படுகிறது. அதே நேரம் குழந்தை கடத்தப்பட்டது தெரியாமல் கடத்தப்பட்ட குழந்தைக்கு பதிலாக வேறொரு குழந்தையை நிமிஷாவிடம் கொடுக்கின்றனர். ஆனால் அது தன்னுடைய குழந்தை அல்ல என நிமிஷா கண்டுபிடிக்க ஏன் அந்த குழந்தையை கடத்தினார்கள் அதன் பின்னணியில் இருப்பது என்ன யார் என்பதை மையப்படுத்தி உருவான கதை தான் டி என் ஏ. அதிலிருந்து படம் சூடு பிடிக்கிறது. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு க்ரைம் திரில்லர் படமாக டிஎன்ஏ படம் வெளியாகி இருக்கிறது.

முழுக்க முழுக்க படத்தின் கதையிலேயே மக்கள் ஊறி போய்விடுகின்றனர். அந்த அளவுக்கு கடைசி வரை பார்ப்பவர்களை படம் ஈர்க்கிறது. இந்த நிலையில் இன்று தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் குபேரா .இந்த படத்தின் மீதும் பெரிய அளவு எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்ப படத்தில் தனுஷின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கண்டிப்பாக இந்த படத்திற்காக தனுஷுக்கு ஒரு விருது கிடைக்கும் என்றும் பலபேர் கூறி வருகின்றனர் .அவருடைய நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம். சமீப காலமாக அவர் நடித்து வெளியாகும் படங்களில் அவருடைய நடிப்புதான் பவர் பேக்காக பார்க்கப்படுகிறது.

பெரிய நடிகர்கள் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் குபேரா. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதர்வாவின் டிஎன்ஏ திரைப்படத்திற்கும் ஆதரவு பெருகிக்கொண்டே வருகின்றது. இதுவரை பாசிட்டிவ் ரிவ்யூஸையே கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள். சோசியல் மீடியாக்களில் டிஎன்ஏ படத்தை பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர். அதர்வாவுக்கு இந்த படம் ஒரு காம்பேக் திரைப்படமாக இருக்கும். நிமிஷா நடிப்பும் அபாரமாக இருக்கிறது. அதில் நடித்த பாலாஜி சக்திவேல் அவருடைய நடிப்பும் பிரம்மாதப்படுத்திவிட்டார் என்று படத்தைப் பற்றி எந்த ஒரு நெகட்டிவ் கமெண்ட்டையும் கொடுக்காமல் பாசிட்டிவ் ஆகவே சொல்லி வருகின்றனர்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்கப்படும் விஷயம் என்னவெனில் ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகிறது. அதனுடன் இன்னொரு ஒரு சிறிய பட்ஜெட் படம் வெளியாகிறது என்றால் பெரிய படத்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்த சின்ன படம் மாறும் பட்சத்தில் தான் அந்த சின்ன படத்தையும் மக்கள் பெரிய அளவில் பார்க்க ஆரம்பிப்பார்கள். அப்படித்தான் அதர்வா விஷயத்திலும் நடந்து இருக்கிறது.

dna

இதுவே சோலோவாக ரிலீஸ் ஆகி இருந்தால் இந்நேரம் அதர்வாவின் படத்தை கொண்டாடுவார்களா என்பது தெரியாது. இன்று தனுஷ் படம் வெளியாகி இருப்பதால் அந்தப் படத்திற்கு டஃப் கொடுக்கிறாரே அதர்வா என டி என் ஏ படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை பார்ப்பதற்காகவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அப்படித்தான் டிஎன்ஏ படத்திற்கு இப்போது கிடைத்திருக்கிறது. இது அதர்வாவுக்கு ஒரு காம்பேக் திரைப்படமாக இருந்தாலும் ஒரு சரியான தருணத்தில் தான் இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் என கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

2 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

3 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago