கூலி படத்தின் ஃபைனல் அவுட்புட்… ராஜமௌலியிடம் போட்டுக் காட்டிய லோகேஷ்… இதான் ரிசல்ட்!

Published on: August 8, 2025
---Advertisement---

ரஜினி நடித்த கூலி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூகவலைதளங்களில் 39 வினாடி கொண்ட மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. என்றைக்குமே குறையாத மாஸ் என்ற கேப்ஷனோடு இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

கூலி படத்தின்போது எடுக்கப்பட்ட மாஸ் காட்சிகள், ரஜினியோட மாஸ் காட்சிகள், லோகேஷ் கனகராஜ் ரஜினியிடம் விளக்கும் காட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

ஆகஸ்டு 14ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாகர், சுருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். சன்பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிச்சிருக்காங்க. அனிருத்தின் இசையில் ஒரு பாடல் வெளியானது. இது மெகா ஹிட் ஆனது.

அனிருத், ரஜினி, சத்யராஜ் படத்தைப் பார்த்து முடித்து விட்டார்கள். ஃபைனல் அவுட்புட்டை லோகேஷ் ரெடி பண்ணிவிட்டாராம். எப்பவுமே அவர் மற்ற பெரிய இயக்குனர்களுக்குப் படத்தைப் போட்டுக் காட்டிவிட்டு அவர்கள் ஏதாவது கரெக்ஷன் சொன்னா மாத்துவாராம். அந்த வகையில் கூலி படத்தை இயக்குனர் ராஜமௌலிக்குப் போட்டுக் காட்டி இருக்கிறார். அவர் படத்தைப் பார்த்து விட்டு படம் தரமாக இருக்குன்னு ரஜினியையும், லோகேஷையும் பாராட்டினாராம்.

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்திய திரை உலகையே வியக்க வைத்தவர் ராஜமௌலி. அவரது ஆர்ஆர்ஆர் படத்துக்கு நாட்டு நாட்டு என்ற பாடலுக்காக ஆஸ்கர் விருதே கிடைத்துள்ளது. அப்படிப்பட்ட மிகப்பெரிய இயக்குனரே கூலி படத்தைப் பார்த்துவிட்டு வியந்து பாராட்டியுள்ளார் என்றால் படம் அந்தளவு தரமாக வந்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. கமலுக்கு ஒரு விக்ரம் ஹிட் கொடுத்ததைப் போல ரஜினிக்கு ஒரு கூலியை லோகேஷ் கொடுத்திருப்பார் என்றே தெரிகிறது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment