ஒரு விடிவு காலம் பொறுந்துருச்சுப்பா.. நாகேஷாக மாறிய சந்தானம்! இததான எதிர்பார்த்தோம்..

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்து பின் ஹீரோவாக சமீபகாலமாக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சந்தானம், சின்னத்திரையில் தனது கெரியரை ஆரம்பித்த சந்தானம் சிம்புவால் வெள்ளித்திரைக்கு வந்தார். தொடர்ந்து சிம்புவுடன் பல படங்களில் நடித்து புகழ் பெற்ற சந்தானம் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக மாறினார்.

வடிவேலு, விவேக் இவர்களுக்கு இணையான ஒரு அந்தஸ்தை பெற்றார். ஆனால் இடையில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் காமெடியில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். இந்த நிலையில் சந்தானத்தை பற்றிய ஒரு செய்தி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு முன்பாகவே எடுக்கப்பட்ட படம் மதகதராஜா.

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான படம்தான் இது. இந்தப் படத்தில் சந்தானம் காமெடி நடிகராக நடித்திருந்தார். 2013 ஆம் ஆண்டிலேயே வெளியாக வேண்டிய படம். இதுவரை வெளியாகவில்லை. வரும் செப்டம்பர் மாதம்தான் ரிலீஸாக உள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது.

பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்ததனால் அடுத்ததாக மீண்டும் சுந்தர் சி மற்றும் விஷால் கூட்டணியில் ஆம்பள என்ற படம் உருவானது. இப்படி அடுத்தடுத்து விஷாலும் சுந்தர் சியும் படங்களில் பிஸியாக இருந்ததனால் மதகதராஜா படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்தன.

ஏற்கனவே படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் விஷால் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதற்காக படக்குழுவினரிடமும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தினரிடமும் பேச்சுவார்த்தை மேற்கொண்டாராம் விஷால்.

ஆனால் எப்படியோ ஒரு வழியாக செப்டம்பர் மாதம் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சந்தானம் இந்தப் படத்தில் இறந்த ஒரு பிணமாக நடிக்கிறாராம். அதாவது மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் அப்படித்தான் நடித்திருப்பார். அதே மாதிரியாக ஒரு கேரக்டரில்தான் சந்தானம் நடித்திருக்கிறாராம்.

Next Story