Categories: Cinema News latest news

குபேரா காப்பாத்துமா அதுவும் கோலிவுட்டை குப்புறப்போட்டு கவுத்துடுமா? சிம்புவை தொடர்ந்து தனுஷ் வராரு!

வர வர பெரிய நடிகர்கள் படங்கள் என்றாலே பயந்து தான் வருது. இளம் இயக்குநர்கள் மற்றும் டயர் 3 நடிகர்களின் படங்கள் என்றால் கூட பார்க்க நல்லா இருக்கு. ஆனால், இந்த டயர் ஒன் மற்றும் டயர் 2 நடிகர்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்து விட்டு சுய பில்டப்பையும், படம் முழுவதும் தாங்கள் மட்டுமே தாங்க வேண்டும் என்கிற தேவையற்ற தலையீடு காரணமாகத்தான் கோலிவுட்டில் பெரிய நடிகர்கள் படங்கள் எல்லாமே கவ்வக் கொடுத்து அடிவாங்கி வருவதாக கூறுகின்றனர்.

இந்த ஆண்டு வெளியான பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய இயக்குநர்கள் என சொல்லிக் கொள்ளும் பில்டப் ஆசாமிகளின் அனைத்துப் படங்களுமே அட்டு ஃபிளாப் தான். சில படங்கள் ஓடினால் கூட, ஒட்டுமொத்த ரசிகர்களையும் திருப்திப்படுத்தியதாகவோ ரிப்பீட் வேல்யூ படங்களாக சுத்தமாக இல்லை என்பது தான் நிதர்சனம்.

மத கஜ ராஜா, குடும்பஸ்தன், டிராகன், டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்கள் மட்டுமே அனைவரையும் கவர்ந்து திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றன. அஜித் குமாரின் விடாமுயற்சி, ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை, பாலா இயக்கிய வணங்கான், ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், சூர்யா நடித்த ரெட்ரோ மற்றும் மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு கூட்டணியில் வெளியான தக் லைஃப் என அனைத்துமே தலைவலி படங்கள் தான் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

சிம்பு நடித்த நிலையில், இனிமேல் அவர் தான் ரங்கராய சக்திவேல் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் தக் லைஃப் படத்தை பார்த்த பின்னர், இந்த முறையும் தலைவனையும் மணிரத்னம் சாகடிச்சிட்டாரே என டென்ஷன் ஆகிவிட்டனர்.

அடுத்து இந்த மாதம் இன்னும் 2 வாரங்கள் கழித்து ஜூன் 20ம் தேதி வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள குபேரா படம் வெளியாகிறது. இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் நெகட்டிவிட்டிக்கு எதிராக அப்படி பேசியும் இதுவரை படம் தொடர்பான எந்தவொரு எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இல்லை என்கின்றனர்.

இதுவொரு டப்பிங் படமாகவே இருக்கும் என்றும் கருதுகின்றனர். தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படமாவது கோலிவுட்டுக்கு பெரிய வசூலை தரவேண்டும் என்கின்றனர். பிரதீப் ரங்கநாதன் எல்லாம் ஹிட் கொடுத்து வரும் நிலையில், தனுஷிடம் இருந்தும் அதை எதிர்பார்க்கின்றனர்.

Published by
Saranya M