அடி மேல் அடி விழுந்தாலும் ரஜினியை விடாமல் துரத்தும் லைக்கா! வச்சாங்க ஒரு கண்டீசன்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:17  )

Actor Rajini: ரஜினியுடன் மீண்டும் லைக்கா கைகோர்ப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. சமீபத்தில் லைக்கா தயாரிப்பில் ரஜினி நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது .

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் போலி என்கவுண்டர் பற்றியும் கோச்சிங் கிளாஸ் மூலமாக பணம் மோசடி செய்யும் கும்பலை பற்றியும் சொல்லும் படமாக அமைந்திருந்தது. ஃபேமிலி ஆடியன்ஸை இந்த படம் பெரிய அளவில் ஈர்த்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் .

ஆனால் லைகாவுக்கு இந்த படத்தால் 200 கோடி நஷ்டம் தான் என்ற ஒரு கருத்தும் பரவி வருகிறது. இருந்தாலும் மீண்டும் ரஜினியுடன் இணைய ஏன் லைக்கா ஆர்வம் காட்டி வருகிறது என்பதை பற்றிய ஒரு செய்தி தான் தற்போது வைரல் ஆகி வருகின்றது. ஏற்கனவே ரஜினியை வைத்து லைக்கா தயாரித்த தர்பார் படம் எந்த அளவு நஷ்டம் அடைந்தது என அனைவருக்கும் தெரியும்.

அதைப்போல லால் சலாம் படம் அதுவும் பெரிய அளவில் நஷ்டமடைந்த திரைப்படம். இப்போது வேட்டையன் திரைப்படத்தாலும் 200 கோடி தங்களுக்கு நஷ்டம் தான் என சொல்லும் வகையில் மீண்டும் ஒரு படத்தில் ரஜினி நடித்துக் கொடுத்தால் அதன்மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை லாபத்தை ஈட்டி விடுவோம் என்ற ஒரு காரணத்தினாலேயே ரஜினியிடம் கால்சீட் கேட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த ஒரு தகவல் தான் இப்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதனால் ரஜினியின் தரப்பில் இதற்கு என்ன பதில் வரும் என அனைவரும் காத்துக் கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு கூலி திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் கவனம் செலுத்துவார்.

அதனை எடுத்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி அவர் நினைத்தால் மீண்டும் லைக்காவுடன் இணைய வாய்ப்பு இருக்கும் என தெரிகிறது. இருந்தாலும் அவருடைய உடல் நலனையும் கருத்தில் கருதி அவர் இன்னும் எத்தனை படங்களில் நடிப்பார் என்பதை பொறுத்து இதற்கான பதில் கூடிய சீக்கிரம் தெரிய வரும்.

வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு கூலி திரைப்படத்திற்கு தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு காரணம் லோகேஷின் தரமான சம்பவம். ரஜினியை வைத்து எந்த மாதிரியான ஒரு கதைக்களத்தை ஆக்சன் திரில்லர் படமாக கொடுக்கப் போகிறார் என்ற வகையில் அந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

Next Story