பொழச்சிக்குவாரா ஜீவா… அர்ஜூனுடன் மோதும் அகத்தியா… ஏஞ்சலுடன் மோதும் டெவிலா?

by ராம் சுதன் |

Aghathiyaa: ஜீவா நடிப்பில் வெளியாக இருக்கும் அகத்தியா திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிப்பில் கோமாளி, எல்கேஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது மூக்குத்தி அம்மன்2, சுமோ, ஜெயம் ரவியின் ஜீனி உள்ளிட்ட திரைப்படங்கள் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இதையடுத்து, தற்போது அகத்தியா திரைப்படத்தினை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தினை பா.விஜய் இயக்க இருக்கும் நிலையில், ஜீவா, அர்ஜூன் சர்ஜா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தினை இசையமைக்க இருக்கிறார்.

மிகப்பெரிய பொருட்செலவில் பீரியட் பேண்டசி பிரிவில் இப்படம் உருவாக்கப்பட இருக்கிறது. தேவதைகளுடன் மோதும் பேய்கள் கதையாக இப்படம் தயாரிக்கப்பட இருப்பதால் ஜீவாவின் கேரியரில் நல்ல வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஹாரர் ஜானரில் இப்படம் 2025ம் ஆண்டு ஜனவரி 31ந் தேதி வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: ஷோபனாவிற்கு பாட சான்ஸ் கொடுக்க மறுத்த இயக்குனர்கள்! இதுதான் காரணமா?

Next Story