சிம்புவுக்கு தோள் கொடுக்க தயாரான அந்த நிறுவனம்.. STR50 படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!

by ramya suresh |
சிம்புவுக்கு தோள் கொடுக்க தயாரான அந்த நிறுவனம்.. STR50 படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!
X

Actor Simbu: தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே நடித்து வரும் சிம்பு காதல் ஓய்வதில்லை என்கின்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். முதல் திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்தது. அதனை தொடர்ந்து ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.

தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வந்த சிம்பு பின்னர் காதல் சர்ச்சைகள், நடிகர் சங்கம் கொடுத்த ரெட் கார்ட் போன்ற பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தார். அதனைத் தொடர்ந்து உடல் எடை அதிகரித்து நடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்த சிம்பு சினிமாவிலிருந்து சிறிது பிரேக் எடுத்துக்கொண்டார்.

பின்னர் கடகடவென தனது உடம்பை குறைத்து மாநாடு திரைப்படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல போல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் தக் லைப் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

சிம்பு லைன் அப்: நடிகர் சிம்பு தற்போது பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்க இருக்கும் தனது 49வது திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இப்படத்தில் நடிகர் சிம்பு கல்லூரி மாணவனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. நடிகர் சந்தானம் இந்த திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. படம் இந்த வருடத்தின் இறுதிக்குள் முடிவடையும் இன்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எஸ்டிஆர் 50: தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வந்த சிம்பு தனது 50வது திரைப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருக்கின்றார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தை சிம்பு தயாரிக்க இருப்பதாக அவரின் பிறந்த நாளில் அறிவிப்பு வெளியானது. இந்த செய்தி மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

பல தயாரிப்பு நிறுவனங்கள் இது மிகப்பெரிய பட்ஜெட் என்பதால் இப்படத்தை தயாரிப்பதற்கு தயக்கம் காட்டி வந்த நிலையில் சிம்பு தானே இந்த திரைப்படத்தை தயாரிக்கிறேன் என்று ஆத்மன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார்.

சிம்புவுடன் ஏஜிஎஸ் கூட்டணி: இந்நிலையில் சிம்புவின் 50வது திரைப்படத்தை ஆத்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஜிஎஸ் நிறுவனமும் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது சிம்பு நடிக்க இருக்கும் எஸ்டிஆர் 51 என்கின்ற திரைப்படத்தை தயாரிக்க இருக்கின்றது.

இப்படத்தை அஸ்வந்த் மாரிமுத்து இயக்க இருக்கின்றார். இது தொடர்பான அறிவிப்பும் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான நிலையில் தற்போது எஸ்டிஆர் 50 திரைப்படத்தையும் சிம்புவுடன் இணைந்து தயாரிப்பதற்கு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Next Story