தொலஞ்சி போன ஹார்ட் டிஸ்கை வச்சி ரஜினி பொண்ணு போடும் பிளான்!. இதலயாவது காசு வருமா?!...

Aishwarya Rajini: ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இயக்கம் பற்றி கற்றுக்கொண்டார். கணவர் தனுஷை வைத்து 3 என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஓடாத படங்கள்: அனிருத் இசையமைப்பில் வெளிவந்த இந்த படத்தில் பாடல்கள் ஹிட் அடித்தது. அடுத்து கார்த்திக் கவுதமை வைத்து வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் ஓடவில்லை. அதன்பின் பல வருடங்கள் ஐஸ்வர்யா திரைப்படங்களை இயக்கவில்லை. அதோடு, தனுஷிடமிருந்து பிரிந்தார். தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து ரசிகர்களிடமும், ஊடகங்களிடமும் அதிகம் விவாதிக்கப்பட்டது.
தனுஷை பிரிந்த பின் தனி வீட்டில் வசித்து வருகிறார். மேலும், உடல் ஃபிட்னஸை கவனிப்பது, மகன்களுடன் நேரம் செலவிடுவது, சினிமாவுக்கான கதைகளை எழுதுவது என தன்னை பிஸி ஆக்கிக்கொண்டார். மேலும், 9 வருடங்கள் கழித்து லால் சலாம் என்கிற படத்தை இயக்கினார்.
ரஜினியை வைத்து லால்சலாம்: கிரிக்கெட்டில் மதம் எப்படி விளையாடுகிறது என்பதை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதையை எழுதியிருந்தார். மேலும், தனது அப்பா ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தால் படம் போனி ஆகும் என கணக்குப்போட்ட அவர் ரஜினிக்காக நிறைய காட்சிகளை உருவாக்கினார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
தொலைந்து போன ஹார்ட் டிஸ்க்: படம் ரிலீஸுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு படத்தின் 25 நிமிட காட்சிகளை எடுத்து வைத்திருந்த ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது என சொல்லி பரபரப்பை கிளப்பினார். அதனால் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போனது. ஆனால், ஹார்ட் டிஸ்க் கிடைக்கவில்லை. எனவே இருப்பதை வைத்தி ஒப்பேற்றி படத்தை ரிலீஸ் செய்தார். அப்படி வெளியான லால் சலாம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. இதனால், ஓடிடி நிறுவனங்களும் இப்படத்தை வாங்க முன்வரவில்லை.
இந்த படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இப்போது தொலைந்து போன அந்த ஹார்ட் டிஸ்க் கிடைத்துவிட்டதாம். எனவே, அந்த 25 நிமிட காட்சிகளை தனியாக ஓடிடியில் ஒளிபரப்பலாம் என்கிற ஐடியா ஐஸ்வர்யாவுக்கு வந்திருக்கிறது. படத்தையே வாங்க முன் வராத ஓடிடி நிறுவனங்கள் இதை வாங்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.