Categories: latest news

ஆதிக் கூட்டணியில் உருவாகும் ஏகே 64… அஜித்தின் சம்பளம் ‘சர்’ருன்னு ஏறிடுச்சே!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி ஃபேன் பாய் படமாக உருவானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து அவரது அடுத்த படமும் அதே காம்போ தான். படத்தில் அஜித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

105 முதல் 165 கோடி வரை சராசரியாக சம்பளம் வாங்கி வரும் அஜித்தின் அடுத்த படத்திற்கான சம்பளம் எகிறி உள்ளது. கடைசியாக வெளியான குட் பேட் அக்லி படத்துக்கு 150 கோடி வரை அஜித்தின் சம்பளம் என்கிறார்கள்.

குட் பேக் அக்லியின் வெற்றியைத் தொடர்ந்து அதே காம்போவில் அடுத்த படமும் தயாராகிறது. அஜித் 64 படத்துல ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக தகவல் வந்துள்ளதாம். அந்தப் படத்துக்கு அஜித்தின் சம்பளம் 200 கோடியே 80 லட்சமாம். ஏன்னா கூட்டுத்தொகை 10 வரணும்கறதுக்காக இந்த சம்பளம் கேட்டாராம்.

அதற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் சம்மதித்து விட்டதாம். படம் நல்லா வரணும். அதைத் தாண்டி இதுல கமிஷன் அடிக்கணும். அதுல கமிஷன் அடிக்கணும்னு எல்லாம் போகவே மாட்டாரு. அதனால மைத்ரி மூவி மேக்கர்ஸ்சும் அவரையே டிக் பண்ணி விட்டார்களாம்.

அஜித்தும் எப்பவும் தனக்கு சாதகமாக இயக்குனர் இருக்கணும்னு நினைப்பாரு. அதனால் அந்த மாதிரி ஆள்கள் கூட தான் டிராவல் பண்ணுவாரு. தனக்குப் பிடிக்காத காட்சிகளைக் கூட கட்டாயப்படுத்தி பண்ணச் சொல்லி தியேட்டரில் கிளாப்ஸ் வாங்கிக் கொடுத்தவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

அதனால் அவருடனே திரும்பவும் படங்களில் பணியாற்ற அஜித் விரும்புகிறார் என்றே சொல்லலாம். ஆதிக்கின் படத்தைத் தொடர்ந்து தனுஷ் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது. அஜித் – ஆதிக் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் செப்டம்பர் முதல் சூட்டிங் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆகஸ்டு கடைசி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. மேற்கண்ட தகவலை பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் தெரிவித்துள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago