Categories: Cinema News

இர்பானுக்கு ஒரு நியாயம்… அஜித்துக்கு ஒரு நியாயமா? வைரலாகும் ஷாலினி பிரசவம்…

Irfan: சர்ச்சைக்கு பெயர் போன இர்பான் மீண்டும் மகள் விஷயத்தில் சிக்கி இருக்கும் நிலையில் இதே போன்ற ஒரு சம்பவத்தினை நடிகர் அஜித்தும் செய்திருப்பது குறித்து வைரலாகி வருகிறது.

பிரபல யூட்யூபர் இர்பான் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். உணவு ரிவியூ செய்தது சிக்கல் ஏற்பட அதிலிருந்தும் தப்பித்தார். அதைத்தொடர்ந்து தன்னுடைய திருமணத்தின் போது காரில் ஒரு மூதாட்டியை அடித்துவிட அந்த பிரச்சினையிலும் சிக்காமல் தப்பித்து விட்டார்.

இதை தொடர்ந்து மனைவி கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் பாலினத்தை இந்தியாவில் அறிந்து கொள்ளக்கூடாது. இதனால் சிங்கப்பூர் சென்று பிரத்தியேகமாக அதை தெரிந்து கொண்டு வந்து மகள் என வீடியோ போட்டது பெரிய அளவில் பிரச்சினை ஏற்பட்டியது.

அவர் மீது நடவடிக்கை பாயும் என பலர் எதிர்பார்த்து இருக்க மன்னிப்பு கடிதம் வாங்கிக் கொண்டு அவரை விட்டு விட்டனர். அந்த வீடியோ நீக்கப்பட்டது. மகள் பிறந்து மூன்று மாதங்கள் கடந்து இருக்கும் நிலையில் சமீபத்தில் மனைவியின் பிரசவ வீடியோவை இர்பான் தன்னுடைய யூட்யூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் குழந்தையின் தொப்புள் கொடியை இர்பானை துண்டிக்க மருத்துவர் கத்தியை கொடுப்பதும் அவர் வாங்கிய கத்தரிப்பதும் இடம்பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து இந்த விஷயம் சாட்சியான நிலையில் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இது போன்று நடிகர் அஜித்தும் மனைவி ஷாலினி பிரசவம் நடந்தபோது அவருடன் மருத்துவமனையில் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் தன்னுடைய கேமராவின் மூலம் பிரசவத்தை படம் பிடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆனால் கண்டிப்பாக அஜித் சட்டத்தை மீறி இது போன்ற விஷயங்களை செய்திருக்க மாட்டார். பிரசவத்தில் ஷாலினிக்கு துணையாக இருக்கும் வேண்டும் என்பதற்காகவே அப்போது அவர் அந்த அறையில் இருக்க சம்மதம் தெரிவித்தார் எனவும் அஜித்திற்கு ஆதரவுகள் வந்து கொண்டிருக்கிறது.

Published by
ராம் சுதன்