தீபாவளி செலிபிரேஷனில் அஜித்! அதுவும் கூட யார் இருக்கானு பாருங்க.. வைரலாகும் புகைப்படம்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:21  )

தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது அவர் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவருடைய நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இன்னும் அந்த படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கின்றது.

அதனால் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை கேட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வரும் அஜித் இன்னொரு பக்கம் அவருடைய பொழுதுபோக்கு அம்சமான ரேசிலும் கலந்து கொண்டு வருகிறார்.

தனியாக ரேஸ் கம்பெனியை ஆரம்பித்து அதன் மூலம் துபாயில் ஒரு கார் பந்தயத்தை நடத்த இருக்கிறார் அஜித். அதற்கான வேலைகளில்தான் இப்போது இருந்து வருகிறார். இந்த நிலையில் திடீரென ஷாலினியும் மாதவனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

அலைபாயுதே படத்திற்கு பிறகு நீண்ட வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்துக் கொண்ட அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. திடீரென எப்படி இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்பதற்கான காரணமும் இப்போது வெளியாகியிருக்கிறது. மாதவன் தீபாவளி ஸ்பெஷல் ஆக ஒரு நிகழ்ச்சியை நடத்தினாராம்.

அதில் அஜித்தும் கலந்து கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அப்போதுதான் ஷாலினியும் மாதவனும் சந்தித்து அந்த புகைப்படத்தை எடுத்து இருப்பார்கள் என தெரிய வந்திருக்கிறது.

எந்த ஒரு விழாக்களிலும் கலந்து கொள்ளாத அஜித் மாதவன் நடத்திய அந்த தீபாவளி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் மட்டும் எப்படி கலந்து கொண்டார் என்பது தான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story