32 ஆண்டுகால போராட்டம்.. வலிகள்.. வேதனைகள்! அஜித்தின் போஸ்டரை வெளியிட்டு லைக்கா பெருமிதம்

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் அஜித் ஒரு மாஸ் நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் கடைசி கட்ட செட்யூலில் நடித்து வருகிறார். இன்னும் ஒரு வார காலத்தில் விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய இருக்கிறது. படத்தை மகிழ் திருமேனி இயக்க அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

இவர்களுடன் அர்ஜூன், ஆரவ் போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடிக்கின்றனர். படத்திற்கு ஒம் பிரகாஷ் ஒளிப்பதிவாளர். இசை தேவி ஸ்ரீ பிரசாத். சண்டை பயிற்சியாளராக சுப்ரீம் சுந்தர் பணியாற்றுகிறார். ஒட்டுமொத்த டெக்னீசியன்களும் மிகவும் திறமை வாய்ந்தவர்களாகத்தான் இந்தப் படத்திற்கு பணியாற்றி வருகின்றனர்.

படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஒரு கூஸ் பம்பில் வைத்திருந்த நிலையில் இன்று அஜித்தின் இன்னொரு போஸ்டரும் வெளியாகியிருக்கின்றன. அதோடு சினிமாவிற்கு அஜித் வந்து 32 வருடங்கள் ஆகியிருக்கின்றது. அதை கொண்டாடும் விதமாக இந்த போஸ்டரை லைக்கா வெளியிட்டிருக்கிறது.

அந்த போஸ்டரில் ஒரு வாசகமும் எழுதியிருக்கின்றது. அதில் ‘அஜித்குமாரின் 32வது ஆண்டுவிழா. சோதனைகள், இன்னல்கள் மற்றும் வெற்றிகளின் மூலம் உருவாக்கப்பட்ட பயணம். அவரது விடாமுயற்சி நீடித்த வெற்றியின் இறுதி அடையாளம். விடாமுயற்சியே திருவினையாக்கும்’ என எழுதப்பட்டிருக்கின்றது.

உண்மையிலேயே அஜித் ஆரம்பகாலத்தில் ஏகப்பட்ட வலிகளை சோதனைகளை சந்தித்துதான் இன்று இந்தளவு உயரத்தை அடைந்திருக்கிறார். அதுவும் எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்றைக்கு ஒரு உச்சத்தை அடைந்திருக்கும் நடிகராக வளர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய கடுமையான விடாமுயற்சியே காரணமாகும்.

மேலும் இந்த படத்தின் டைட்டில் அவருக்கு பொருத்தமான டைட்டில்தான். அதுமட்டுமில்லாமல் நான் பல தடைகளை கடந்து வந்தவன் என்பதை அந்த போஸ்டரிலேயே அஜித் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Next Story