Vijay Ajith: விஜயின் அரசியல் காட்சி மாநாடு வருகிற 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கிறது. விஜயின் ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் என பல லட்சம் பேர் இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
மாநாட்டில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு கட்சி சார்பிலும், காவல்துறை சார்பிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் விஜய் 2 மணி நேரம் பேசுவார் என செய்திகள் வெளியாகவுள்ளது. கட்சியின் கொள்கை, எதை நோக்கி அவரின் அரசியல் பயணம்? என எல்லாவற்றை பற்றியும் விஜய் விரிவாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சி பெயரையும் அறிவித்து கட்சிக் கொடியையும் சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்திருந்தார் விஜய். அதில் வரும் யானை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என ஒரு அரசியல் கட்சி வழக்கும் தொடர்ந்துள்ளது. ஒருபக்கம், விஜயால் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முடியாது என பலரும் சொல்லி வருகிறார்கள்.
ஒருபக்கம், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் விஜய் கண்டிப்பாக மீண்டும் சினிமாவில் நடிப்பார் எனவும் சிலர் சொல்கிறார்கள். மேலும், அரசியல் சுலபமில்லை, விஜயால் அதை சிறப்பாக நடத்த முடியாது எனவும் அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள். இது எல்லாவற்றுக்கும் மாநாட்டில் விஜய் பதில் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் விஜயின் போட்டி நடிகராக பார்க்கப்படுபவர் அஜித். அவரின் ரசிகர்கள் மோதிக்கொண்டாலும் அவர்களுக்குள் எந்த போட்டியும் இல்லை. அவர்களிடம் நல்ல நட்பு இருக்கிறது. சமீபத்தில் இருவரும் சந்தித்தபோது விஜயின் அரசியல் எண்ட்ரிக்கு அஜித் வாழ்த்து சொன்னதாக சொல்லப்படுகிறது. தன்னிடம் கோட் படத்தை அஜித் பாராட்டி பேசியதாக வெங்கட்பிரபு சொல்லியிருந்தார்.
அதோடு, தவெக மாநாட்டில் விஜய்க்கு வாழ்த்து சொல்லி அஜித் எழுதிய கடிதமும் வாசித்து காட்டப்படவிருப்பதாகவும் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், மாநாடு நடக்கும் பகுதியில் சில அஜித் ரசிகர்கள் விஜயும், அஜித்தும் அருகே நிற்பது போல பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் ‘தல ரசிகன் தளபதி தொண்டன்’ அனைவரும் திரண்டு வாரீர் என எழுதப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Kanguva: தமிழ்…
Kanguva: சூர்யா நடிப்பில்…
Kanguva: சூர்யா…
Kanguva: கங்குவா…
சிறுத்தை சிவாவின்…