அஜித்துக்கே விபூதி அடிச்ச நெட்டிசன்கள்... யாரும் நம்பாதீங்க... சுரேஷ் சந்திரா போட்ட பரபர ட்வீட்...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:38  )

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். அஜித்துக்கு படங்களில் நடிப்பது எந்த அளவுக்கு விருப்பமோ அதே அளவுக்கு கார் மற்றும் பைக் ரேஸ் மீது அதிக ஆர்வம் இருக்கின்றது. இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்கின்ற திரைப்படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

விடாமுயற்சி திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் முடிந்த பாடே இல்லை. துணிவு திரைப்படத்திற்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாந்தது மட்டும்தான் மிச்சம். சமீபத்தில் தான் இப்படத்தின் டப்பிங் பணி தொடங்கியதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தார்கள்.

மேலும் நவம்பர் 10ஆம் தேதி அன்று படத்தின் டீசர் வெளியாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு பொங்கலுக்காவது இந்த திரைப்படம் திரையரங்குகளில் வந்து விடுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு இணைந்து விட்டார்.

தற்போது அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகின்றது. ஒரு பக்கம் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்தாலும் நடிகர் அஜித் கார் ரேஸுக்கும் தயாராகி வருகின்றார். துபாயில் உள்ள ஆட்டோ கார் ரேஸ் மையத்தில் காரை அஜித்குமார் டெஸ்ட் செய்து கொண்டிருந்த வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் இந்த வீடியோவை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டு ஐரோப்பிய ரேசிங் சீசனுக்கு நடிகர் அஜித் தயாராகி வருவதாக கூறியிருந்தார். இது மட்டும் இல்லாமல் அவ்வபோது ரேசிங் தொடர்பான வீடியோக்களையும் புகைப்படங்களையும் சுரேஷ் சந்திரா வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங் தொடர்பான அதிகாரப்பூர்வ வலைதளம் ஒன்று உருவாக்கியுள்ளதாக சமூக வலைதள பக்கங்களில் செய்திகள் பரவி வந்தது.

இதை பார்த்து அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் அது பொய்யானது என்று நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது செய்தி வெளியிட்டு இருக்கின்றார். இந்த செய்தியானது அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Next Story