Ajith: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தின் மாபெரும் வெற்றி அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்? எந்த நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்பது பற்றிய பேச்சு தான் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அஜித் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பு அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான் தெரியும் என சொல்லப்பட்டது.
குட் பேட் அக்லி வெற்றி:
ஆனால் அதற்குள்ளாகவே கோடம்பாக்கத்தில் இருக்கும் சிலர் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் யார் என்பதை ஆராய்ந்து ஓரளவு அறிந்து கொண்டனர். அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என ஓரளவு உறுதிப்பட தெரிந்து விட்டது. ஆரம்பத்தில் குட் பேட் அக்லி படத்தின் மொத்த டீமும் அப்படியே அஜித்தின் அடுத்த படத்தில் இணைவார்கள் என சொல்லப்பட்டது.
அதாவது படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என இவர்கள் அப்படியே அஜித்தின் அடுத்த படத்திலும் இருப்பார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் குட்பேட்அக்லி படத்தின் போது ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. அதனால் ஆதிக் அஜித்தின் அடுத்த படத்தில் இருந்தால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்காது அல்லது மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பதாக இருந்தால் அந்த படத்தை ஆதிக் இயக்க மாட்டார் என சொல்லப்பட்டது.
தயாரிப்பாளர் இவரா?:
ஆனால் இப்போது அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் தான் இயக்கப் போகிறார் என ஓரளவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். அதனால் தயாரிப்பாளர் யார் என்பது போன்ற கேள்விகள் எழுந்து வந்தன. கடைசியில் இதற்கான ஒரு விடை இப்போது தெரிந்திருக்கிறது. அஜித்தின் அடுத்த படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. அதுவும் இந்த வருடம் நவம்பரில் இருந்து அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வரை அஜித் இந்த படத்திற்காக கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
அடுத்தப் பட ரிலீஸ்:
மார்ச் மாதத்தில் இருந்து மீண்டும் அவர் கார் ரேசில் கலந்து கொள்ளப் போகிறாராம். அதனால் அந்த இடைப்பட்ட காலத்தில் அஜித்தின் போர்ஷன் எல்லாவற்றையும் முடித்து விட வேண்டும் என அஜித் தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது. மீதமுள்ள நாட்களில் மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஆதிக் எடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது .ஆக மொத்தம் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் அந்த படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தில் பட குழு இருப்பதாக தெரிகிறது.
isari
இதற்கிடையில் ஐசரி கணேஷை பொருத்தவரைக்கும் ஒரு நடிகரை அவர் கமிட் செய்து விட்டால் தொடர்ந்து அவருடைய நிறுவனத்தில் மூன்று படங்களில் அவர் நடிக்க வேண்டும். ஏற்கனவே சிம்பு பிரதீப் ரங்கநாதன் இவர்கள் விஷயத்தில் இப்படித்தான் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அவர்கள் இருவராலும் தொடர்ந்து அவருக்கு கால் சீட் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட அது தயாரிப்பு கவுன்சில் வரைக்கும் புகாராக சென்றது. இப்போது அஜித் இவருடைய நிறுவனத்தில் நடிக்கப் போகிறார் என்றதும் அஜித்தும் தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூன்று படங்களில் நடிப்பாரா என்ன என்பது பற்றிய கேள்விதான் இப்போது எல்லோரும் மனதிலும் இருந்து வருகிறது.
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…