அஜித்தின் பத்ம விருது கடந்தாண்டே முடிவு செய்யப்பட்டதா? வைரலாகும் புகைப்படம்… முரட்டு Prediction ஆ இருக்கே!..
Ajithkumar: நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது விஜய் ரசிகர்களின் புகைப்படம் சில வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய் தான். இருவருமே தங்களுடைய படங்களில் நடிப்பில் அசத்தி இன்னமும் தங்களுடைய இடங்களை தக்க வைத்து கொண்டு இருக்கின்றனர். இதில் நடிகர் விஜய் தன்னுடைய கடைசி படத்தை அறிவித்துவிட்டார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் கடைசி திரைப்படத்துக்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு வைரலாகி வருகிறது. இப்படத்தினை அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தினை முடித்த கையோடு நடிகர் விஜய் 2026 அரசியலில் மும்முரம் காட்ட இருக்கிறார். தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக பல விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் பலரும் முன் வைத்து வருகின்றனர்.
இருந்தும் நடிகர் விஜயின் ரசிகர்கள் எல்லா விமர்சனங்களுக்குமே தக்க பதிலடியை கொடுத்து வந்து கொண்டு தான் இருக்கின்றனர். விஜய் தமிழக வெற்றிக் கழகத்தினை எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு கொடுக்காமல் தனி கட்சியாகவே செயல்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
இதனால் தவெக ஆதரவு ஒன்றிய அரசின் பாஜகவிற்கு கிடைக்காமல் போனால் இந்தாண்டு அஜித்துக்கு பத்ம விருதுகள் கொடுக்கப்படும் என கடந்தாண்டே விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு இருக்கும் நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதை தற்போது பரப்பி வரும் விஜய் ரசிகர்கள் அவருக்கு நாங்க இருக்கோம் என ஆதரவாக பேசி வருகின்றனர். அஜித் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களை முடித்து விட்டு ரேஸிங்கில் ஈடுபட்டு வருகிறார். செப்டம்பர் வரை ரேஸிங்கில் தான் இருப்பார் எனவும் கூறப்படுகிறது.