ரெண்டு மீட்டிங்.. ஆனா கே.ஜி.எஃப் 3 இல்ல! அஜித் - பிரசாந்த் நீல் கூட்டணி எப்போது? வெளியான அப்டேட் இதோ

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்னுள் வைத்து மாஸ் காட்டி வரும் நடிகராக இருப்பவர் அஜித். ரசிகர்கள் மட்டும் அல்லாது பிரபலங்கள் மத்தியிலும் இவருக்கு என ஒரு தனி கிரேஸ் இருந்து வருகிறது.

இவருடன் நடித்த அனைத்து நடிகைகளும் ஏன் இவருடன் சேர்ந்து நடிக்காத நடிகைகளுமே அஜித்தை மிகவும் பிடிக்கும் என்றுதான் கூறியிருக்கிறார்கள். எந்த ஒரு நடிகையின் பேட்டியை கேட்டாலும் உங்களுடைய ஃபேவரைட் நடிகர் யார் என்றால் அவர்கள் முதலில் கூறுவது அஜித்தை தான்.

அந்த அளவுக்கு அனைத்து பிரபலங்களும் விரும்பும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். அந்த அளவுக்கு மற்றவர்களிடம் அஜித் நடந்து கொள்ளும் முறை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இன்று தமிழ் சினிமாவில் ஒரு ஸ்டைலிஷ் ஆன நடிகராகவும் ஒரு மாஸ் ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித்.

தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அஜித். இதற்கிடையில் அஜித்தை வைத்து பிரசாந்த் நீல் ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் அது கேஜிஎப் 3 ஆக கூட இருக்கலாம் என்றும் பல செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

இதைப் பற்றி பிரபல மூத்த பத்திரிக்கையாளர் சுபேர் கூறும் போது அஜித் தற்போது விடாமுயற்சி படத்திலும் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தை பொருத்தவரைக்கும் கண்டிப்பாக தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

அதேபோல் குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக போகின்றது. மொத்தத்தில் தல பொங்கல் தல தீபாவளி என்றுதான் ரசிகர்கள் இந்த ஆண்டு கொண்டாட இருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக ஒரு ஆறு மாதம் அஜித் பிரேக் எடுக்க இருக்கிறார்.

அவருக்கு ஒரு சின்ன சர்ஜரி செய்ய உள்ளதால் அந்த பிரேக் அவருக்கு கட்டாயமாக தேவைப்படுகிறது. 6 மாதத்திற்கு பிறகு சிறுத்தை சிவா சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து அஜித் இணைய இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தான் அஜித் ஒரு வேளை பிரசாந்த் நீலுடன் இணைந்து படம் பண்ணுவார் என்று எதிர்பார்க்கலாம்.

ஏனெனில் இரண்டு முறை பிரசாந்த் நீலும் அஜித்தும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அது எதைப் பற்றி என தெரியவில்லை. ஆனால் இரண்டு முறை அந்த மீட்டிங் நடந்திருக்கிறது. ஆனால் கண்டிப்பாக அஜித்தை வைத்து பிரசாந்த் நீல் ஒரு படத்தை எடுப்பார் என உறுதியாக சொல்லலாம். ஆனால் அது கேஜிஎப் 3 இருக்காது என்று சுபேர் கூறி இருக்கிறார்.

Related Articles
Next Story
Share it