Ajith: ஒரே நேரத்தில் கமல் மற்றும் அஜித் படங்களின் வாய்ப்பு வர இயக்குனர் என்ன செய்வது என்று தெரியாமல் அஜித்திடம் முறையிட்ட சம்பவம் பற்றி தான் இப்போது இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம். சஞ்சய் தத் நடிப்பில் ஹிந்தியில் வெளியான முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தின் ரீமேக்கை தமிழில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற பெயரில் எடுத்தார்கள்.
அதன் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தில் கமலுக்கு முன்னாடி ரஜினியை வைத்து எடுக்க நினைத்தார்கள். அதுமட்டுமல்ல அஜித்திடமும் இந்த கதை சொல்லப்பட்டிருக்கிறது. கடைசியில் கமல் தான் இந்த படத்தில் நடிக்க முன் வந்தார்.
இந்த படத்தை சரணை வைத்து இயக்கியிருந்தார்கள். ஏப்ரலில் இந்த படம் ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட்டில் படத்தை முடிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கூறி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே சரண் அஜித்தை வைத்து அட்டகாசம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தாராம்.
அதனால் ஆகஸ்டுக்குள் எப்படி வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தை முடிப்பது என தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார் சரண். அதே நேரம் அட்டகாசம் படத்தையும் முடிக்க வேண்டும். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அஜித்திடம் போய் ஆலோசனை கேட்டிருக்கிறார் சரண்.
உடனே அஜித் பரவாயில்லை. அது கமல் சார் படம். வந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம். அதில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். நான் ஜி படத்தை முடித்துவிட்டு வருகிறேன். அதன்பிறகு அட்டகாசம் படத்தை தொடரலாம் என கூறினாராம் அஜித்.
அட்டகாசம் படத்தில் நடிக்கும் போதே அஜித் ஜி படத்திலும் நடித்துக் கொண்டிருந்தாராம். ஜி படத்திற்கு கொஞ்ச நாள் கால்ஷீட். அட்டகாசம் படத்திற்கு கொஞ்ச நாள் கால்ஷீட் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தாராம் அஜித்.
வசூல்ராஜா எம் பி பி எஸ் படத்தின் வாய்ப்பு வந்ததும் அட்டகாசம் படத்தை நிறுத்திவிட்டு ஜீ படத்தை முழுவதுமாக முடித்துவிட்டு வருகிறேன் என இந்த படத்தை விட்டுக் கொடுத்தாராம் அஜித். இதை ஒரு பேட்டியில் சரண் கூறி இருக்கிறார்.
Aishwarya rai:…
Amaran: ராஜ்கமல்…
நடிகர் சிம்பு…
Biggboss 8: விஜய்…
தக் லைஃப்…