அஜித் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…
குட்பேட் அக்லி: அஜீத் சாரை எப்படி எல்லாம் பார்க்கணும்னு ஆசைப்பட்டோமோ அப்படி எல்லாம் பார்க்குற மாதிரியான படமா வந்துருக்கு. துணிவுல இருந்து ஆக்ஷன் ஸ்டைல், மங்காத்தால இருந்து வில்லனிசம் ஸ்டைல், அதே மாதிரி பில்லா படத்துல உள்ள ஸ்டைல், லுக் எல்லாமே இருக்கு. பல கெட்டப்ல வர்றாரு.
திடீர்னு யங்ஸ்டரா வர்றாரு. திடீர்னு பார்த்தா சால்ட் அண்ட் பெப்பர் லுக்குல இருக்காரு. ஆடியன்ஸ் எல்லாருக்கும் பிடிச்சிப் போகுது. ஒன்றரை நிமிஷம் டீசர்ல இவ்ளோ விஷயமா? அதிலும் ‘மிஸ்டு யு ஆல்’னு ஒரு பஞ்ச் டயலாக்.
இப்ப இந்தப் படத்துக்கு ஹைப் அதிகமா ஆகிடுச்சு. முதல் நாள் வசூல்ல ரெக்கார்டு பிரேக் பண்ணும். அஜீத் படத்துலயே இதுதான் அதிக கலெக்ஷனை எடுக்கப் போகுது.
இட்லி கடை தள்ளி போகுதா?: கேரளா, கர்நாடகாவுல மட்டுமே 10 கோடிக்குப் போகுதாம். இட்லி கடையையும், குட்பேட் அக்லியையும் கம்பேர் பண்ணக்கூடாது. அது சாஃப்டான படம். அந்தப் படமும் ஒரே நாள்ல வருமா? தள்ளிப் போகுமாங்கறதை அவரே தீர்மானிக்கலாம். தள்ளிப்போனா ரொம்ப நல்லது. அப்படி வந்தா அதுக்கான வசூல், ஓபனிங் தனியா கிடைக்கும். போட்டியில் போய் இறங்கி வசூலைக் குறைக்கிறதுக்குப் பதில் தனியா வந்தா நல்லாருக்கும்.
ரெஸ்பான்ஸ்: ஷங்கர் சார் அஜீத்துக்கு மெசேஜ் பண்ணினாரான்னு கேட்குறாங்க. அதுக்கான வாய்ப்புகள் குறைவு. ஏன்னா அஜீத் எல்லா விஷயத்துக்கும் ரெஸ்பான்ஸ் பண்ணிடுவாரு. மிகப்பெரிய இயக்குனருக்கு இப்படி ரெஸ்பான்ஸ் பண்ணாம இருக்க மாட்டாரு. எங்கிட்ட சுரேஷ் சந்திரா எல்லாவற்றையும் சொல்லிடுவாரு.
பெரிய இயக்குனர்கள்: ஷங்கர், அஜீத் காம்போ இணைந்தால் அது கண்டிப்பா பெரிசா இருக்கும். இருவருக்கும் பாதை வேறு. அஜீத் சார் கதையை நம்புறதை விட இயக்குனரை நம்புகிறார். அவருக்கான வசதிகள், சூழலில் அந்த இயக்குனர் சம்மதிப்பார்களான்னு பார்ப்பார். அவருக்கு பெரிய இயக்குனர்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டார். அதே நேரம் ஷங்கருக்கும், அஜீத்துக்கும் அந்த வாய்ப்பு அமைந்தால் இந்தியாவே திரும்பிப் பார்க்கிற படமாகத்தான் அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…