நடிகர் அஜித்துக்கு சமையல், பைக் – கார் ரேஸ், போட்டோகிராஃபி மாதிரி இன்னொரு முக்கியமான பொழுதுபோக்கும் இருக்கிறது. அது என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரம் அஜித்தின் விடாமுயற்சி ஷூட் முடிந்து, போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான அவரது லுக் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. `நீண்ட நாட்களுக்குப் பிறகு இளமையான, கறுப்பு முடியும் தலயைப் பார்த்துட்டோம்’ என அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க அவ்வப்போது பிரியாணி செய்து படக்குழுவினருக்கு விருந்து படைப்பது அஜித்தின் பிடித்தமான செயல். மேலும், ஷூட்டிங்கில் இருந்து இடைவெளி கிடைக்கும் நேரங்களில் சூப்பர் பைக்கை எடுத்துக் கொண்டு உலக நாடுகளில் ட்ரிப் அடிப்பதும் அஜித்துக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படியான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும்.
அதேபோல், கார் ரேஸிலும் போட்டோகிராபியிலும் அவருக்கு இருக்கும் ஆர்வம் தமிழ் திரையுலகமே அறிந்தது. ஆனால், இன்னொரு விஷயத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வம் பெரும்பாலான ரசிகர்கள் அறியாத ஒரு விஷயம். அதுதான் மினியேச்சர் ஹெல்மெட் சேகரிப்பதில் அவருக்கு இருக்கும் பேரார்வம்.
நிஜ ஹெல்மெட்கள் போலவே அளவில் சிறியதாக சின்னஞ்சிறிய ஹெல்மெட்கள் மீது அஜித்துக்கு தீராத காதல் உண்டாம். இதற்காக பல வெளிநாடுகளில் இருந்து மினியேச்சர் ஹெல்மெட்களை வாங்கிக் குவித்திருக்கிறார் அஜித். சென்னையில் உள்ள தனது வீட்டில் இதற்கென தனி இடமே ஒதுக்கி அதில் அந்த ஹெல்மெட்களைப் பாதுகாத்து வருகிறார். இது அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே அறிந்து வைத்திருக்கும் செய்தி.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…