Categories: Cinema News latest news

அஜித்தை இயக்க இருக்கும் பிரபல தமிழ் நடிகர்… அதுவும் இந்த கூட்டணியா? தெறிக்க போது!

Ajith: அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் குட் பேட் அக்லிக்கு போட்டியாக வெளியாக இருந்த இட்லிகடை விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அதற்கு பின்னணி குறித்த ஆச்சரிய அப்டேட் கசிந்துள்ளது.

தனுஷ் தொடர்ச்சியாக ஒரு பக்கம் நடிப்பிலும், இன்னொரு பக்கம் தன்னுடைய டைரக்‌ஷன் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் இயக்கத்தில் இந்த மாதம் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்தது.

இதையடுத்து தனுஷின் நடிப்பில் அடுத்ததாக இட்லிகடை, குபேரா திரைப்படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இதில் தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை திரைப்படத்தில் அருண் விஜய், ராஜ்கிரண், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர்.

இப்படத்தினை வரும் ஏப்ரல் 10ல் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதனால் படத்தின் வசூல் குறைந்தாலும் பரவாயில்லை என முடிவில் இருந்த தனுஷுக்கு தற்போது ஒரு பெரிய அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறதாம். இதனால் இட்லிகடை படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளாராம்.

அதாவது சமீபகாலமாக இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் தனுஷ் தற்போது புதிய இரண்டு ஸ்கிரிப்ட்களை எழுதி வருகிறாராம். அதில் ஒரு கதை அஜித்குமாருக்காக தயாராக இருக்கிறதாம். அப்படத்தின் வேலைகளுக்காக தான் இந்த படத்தின் ரிலீஸை விட்டு கொடுத்திருக்கிறாராம்.

மேலும் இக்கூட்டணியில் அனிருத் இசையமைக்க இருப்பதால் ரசிகர்களிடம் இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் இப்படத்தினை தயாரிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

குட் பேட் அக்லிக்கு பின்னர் அஜித் இன்னும் தன்னுடைய படத்தின் அடுத்த இயக்குனர் யார் என்று முடிவெடுக்கவில்லை. இதனால் இந்த ரேஸில் தனுஷுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Published by
ராம் சுதன்