Categories: Cinema News latest news

குட் பேட் அக்லிய விடுங்க!.. விடாமுயற்சி லுக்க பாருங்க.. ஜேம்ஸ் பாண்ட் லுக்கு தெறி மாஸ்!..

நடிகர் அஜித்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் அஜித்தும் ஒருவர். இவரின் ஒவ்வொரு திரைப்படத்தையும் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். இவர் நடிப்பில் கடைசியாக படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.

விடாமுயற்சி:

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் தான் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி கடந்த இரண்டு வருடங்களாக இயங்கி வருகின்றார். ஒரே நாளில் நடக்கும் கதையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

மேலும் அஜர்பைஜானில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வந்த நிலையில் கால சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்த திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்துவிட்டது.

பொங்கல் ரிலீஸ்:

முதலில் குட் பேட் அக்லி திரைப்படம் தான் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கின்றது என்று கூறப்பட்டு வந்த நிலையில் விடாமுயற்சியின் ரிலீஸ் காரணமாக குட் பேட் அக்லி திரைப்படம் மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தார்கள். மேலும் தற்போது இந்த திரைப்படத்தின் பேட்ச் ஒர்க் வேலை தொடங்கி இருக்கின்றது.

பாங்காக் ஷூட்டிங்:

விடாமுயற்சி திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி மற்றும் பேட்ச் ஒர்க் வேலை மட்டும் பாக்கி இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இதற்காக படக்குழுவினர் பாங்காக்கு சென்றிருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷாவின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார்.

ஜேம்ஸ் பாண்ட் லுக்:

குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் லுக் மிகப்பெரிய வைரலானது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் நடிகர் அஜித்தின் புகைப்படத்தை இணையத்தில் வைரலாகி கொண்டாடி வந்தார்கள். அந்த வகையில் தற்போது அந்த புகைப்படத்திற்கெல்லாம் டப் கொடுக்கும் வகையில் தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படம் அட்டகாசமாக இருக்கின்றது.

கோட்டு சூட்டில் ஜேம்ஸ் பாண்ட் போல் காட்சியளிக்கின்றார் நடிகர் அஜித். மேலும் அவருடன் நடிகர் த்ரிஷா, இயக்குனர் மகிழ்திருமேனி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்த சுரேஷ் சந்திரா படப்பிடிப்பின் இறுதி கட்டத்தில்.. விடாமுயற்சியின் பயணம் முடிவடைகின்றது என்பது போல் கூறியிருக்கின்றார்.

Published by
ramya suresh