Cinema News
சண்டைக்கு மத்தியிலும் பராசக்தி அப்டேட் கொடுத்த பிரபலம்.. இந்த வருஷமே ரிலீஸ் தான் போலயே..
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்கே25 திரைப்படம் அதாவது பராசக்தி என டைட்டில் வைத்திருக்கும் இந்த திரைப்படம் தொடர்பான செய்திகள் தான் உலா வந்து கொண்டிருக்கின்றது. முதலில் இந்த திரைப்படத்தில் நடிக்க இருந்தது சூர்யாதான். புறநானூறு என்கின்ற டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சூரறைப் போற்று திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யாவும் சுதா கொங்கராவும் இணையும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் சில தினங்களுக்கு பின்பு சூர்யா இப்படத்திலிருந்து விலகி விட்டார். இதனைத் தொடர்ந்து படம் ட்ராப் ஆகிவிட்டது என்று கூறி வந்த நிலையில் மீண்டும் அமரன் திரைப்படத்திற்கு பிறகு சுதா கொங்கரா-சிவகார்த்திகேயன் கூட்டணியில் இப்படம் தொடங்கியிருக்கின்றது.

படத்தின் கதை அதுதான் என்றாலும் தலைப்பை மட்டும் மாற்றி இருக்கிறார்கள். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சினிமாவில் முக்கிய இடத்திற்கு முன்னேறி இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் இந்த திரைப்படத்தில் இணைந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டது.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையதில் வெளியாகி வைரலாகி வந்தன. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். மேலும் தவான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார்.
சில தினங்களாகவே இப்படத்திற்கு பராசக்தி என்று டைட்டில் வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் சிவாஜி படத்தின் டைட்டிலை சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கக் கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வந்தது. ஆனால் படக்குழுவினர் முறையாக என்ஓசி வாங்கி நேற்று படத்தின் டைட்டிலை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதற்கிடையில் விஜய் ஆண்டனி நடிக்கும் சக்தி திருமகன் திரைப்படத்தின் தெலுங்கு டைட்டிலும் பராசக்தி என்பதால் நேற்று முதலே சமூக வலைதள பக்கங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. மாறி மாறி இரண்டு படக்குழுவினரும் தாங்கள் வாங்கிய என்ஓசி சான்றுகளை வெளியிட்டு வருகிறார்கள். தற்போது இந்த டைட்டில் யாருக்கு என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தவான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் படம் குறித்து சில அப்டேட்டுகளை தெரிவித்து இருக்கின்றார். அதில் அவர் கூறியிருந்ததாவது ‘பராசக்தி என்ற திரைப்படம் சிவாஜி ரசிகர்களை நிச்சயம் பாதிக்காது. இந்த திரைப்படம் 1950 மற்றும் 60’ஸ் காலகட்டத்தில் நடந்த ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த திரைப்படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் நடைபெற்றது. தற்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது ஷெட்யூல் பாண்டிச்சேரியில் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலையில் முடிவடைந்து விடும். கடைசி ஷெட்யூல் சிதம்பரத்தில் படமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் 5 பாடல்கள் இருக்கும் நிலையில் இந்த ஐந்தையும் ஜிவி பிரகாஷ் முடித்துக் கொடுத்துவிட்டார்.
அவற்றில் இரண்டு பாடல்களின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டது. சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லிலா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை இப்படத்தில் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்’ என்று பேசி இருக்கின்றார்.