Categories: latest news

அக்‌ஷய் குமாருக்கே இந்த நிலைமையா?.. முகத்தைக் கூட காட்ட முடியாமல், தியேட்டர் வாசலில்.. வைரல் வீடியோ!

கடந்த ஜூன் 6ம் தேதி வெளியான ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படத்தின் விமர்சனத்தை ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் நடிகர் அக்‌ஷய் குமார் தியேட்டருக்கு நேரில் சென்று மாஸ்க் அணிந்துக்கொண்டு படம் எப்படி இருக்கு என கேட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நதியத்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தருண் மன்சுகானி இயக்கித்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் அபிஷேக் பச்சன், ரித்தீஷ் தேஷ்முக், சஞ்சய் தத், ஜாக்கி ஷ்ராஃப், நானா படேகர், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், நர்கிஸ் ஃபக்ரி, சோனம் பாஜ்வா, சித்ராங்கதா சிங், ஃபர்தீன் கான், ஷ்ரேயாஸ் தல்பதே, தினோ மோரியா, சவுந்தர்யா ஷர்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் ஒரு பிரம்மாண்டமான கப்பலில் எடுக்கப்பட்டுள்ளது, அங்கு ஒரு பணக்காரர் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடும் போது அவரின் மொத்த சொத்தையும் தனது முதல் மனைவியின் மகனான ஜாலிக்கு வழங்குவதாக அறிவிக்கிறார். ஆனால், மூன்று பேர் வந்து தாங்கள் தான் உண்மையான ஜாலி என்று கூறி சொத்துக்கு உரிமை கொண்டாடுகின்றனர். இந்நிலையில் ஒரு மர்மமான மரணத்தை பற்றி இரண்டு போலி போலீஸ் அதிகாரிகள் விசாரிப்பது என கதையை சுவாரசியப்படுத்தியுள்ளனர். இப்படம் இரண்டு வெவ்வேறு கிளைமேக்ஸ்களை கொண்டு வித்தியாசமாக எடுக்கப்பட்டு வெளியாகி இருக்கிறது.

ஹவுஸ்ஃபுல் படம் இரண்டு கிளைமேக்ஸ்களை கொண்டு புதுமையாக உள்ளது, நகைச்சுவை மற்றும் த்ரில்லிங் சீன்ஸ் பாரட்டும்படி உள்ளது, சிலர் கதை பழையது, அதிகமான கதாப்பாத்திரங்கள் இருப்பதால் பார்ப்பதற்கு குழப்பமாக உள்ளது, ஆபாசமாகவும் உள்ளது என கலவையான விமர்சனங்களை கூறியுள்ளனர்.

இந்நிலையில் அக்‌ஷய் குமார் தியேட்டர் வாசலில் முகத்தில் மாஸ்க் அணிந்து நின்றுக்கொண்டு ரசிகர்களிடம் மைக்கை நீட்டி படத்தின் விமர்சனத்தை கேட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்களுக்கு அவர் மாஸ்க் அணிந்திருப்பதால் அடையாளமும் காணமுடியவில்லை. யாரோ சில பைத்தியக்கார யூடியூபர்கள் மாஸ்க் அணிந்து விமர்சனம் கேட்கின்றனர் என நினைத்துக் கொண்டு சிலர் படத்தை பாராட்டியும் சிலர் கழுவி ஊற்றியும் உள்ளனர். ஒரு சிலர் அக்‌ஷய் குமார் வாய்ஸ் போலவே இருக்கே என்று டவுட்டுடனே செல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

16 minutes ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

2 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

3 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

5 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

8 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

20 hours ago