Categories: Cinema News latest news

விஜய்க்குதான் என்னோட ஓட்டு!.. அட இந்த நடிகையே சொல்லிட்டாரே!….

Vijay: தனது அப்பா எஸ்.கே.சந்திரசேகரால் சினிமாவுக்கு வந்தவர் விஜய். நடிப்பு, நடனம் இரண்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அப்பாவை வற்புறுத்தி சினிமாவில் நுழைந்தார். துவக்கத்தில் இவரின் காது படவே இவரை அவமானப்படுத்தி பேசினார்கள். அதையெல்லாம் வைராக்கியமாக எடுத்துகொண்டு மெல்ல மெல்ல முன்னேறினார்.

அப்பாவை விட்டுவிட்டு மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார். பூவே உனக்காக இவருக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, கில்லி போன்ற படங்கள் விஜயை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது.

இப்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். அப்படி இருக்கும்போதே எனக்கு சினிமா வேண்டாம் என சொல்லிவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின் அவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்கமாட்டார் என சொல்லப்படுகிறது.

2026 சட்ட மன்ற தேர்தலை குறி வைத்திருக்கிறார் விஜய். விழுப்புரம் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி காட்டிவிட்டார். இந்த விழாவில் 8 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சமீபத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆளும் கட்சியை தாக்கி சில விஷயங்கள் பேசினார். மேலும், திருமாவளவன் இந்த விழாவில் கலந்து கொள்ளாதது பற்றி அவர் பேசியதும் விவாதத்திற்கு உள்ளானது.

2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் கட்சியின் போட்டியிடும்போது சினிமா துறையில் இருந்து அவருக்கு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜய் டிவி சீரியல் நடிகை ஆலியா மானசா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘நான் கண்டிப்பாக விஜய்க்குதான் ஓட்டு போடுவேன். பிரச்சாரத்திற்கு என்னால் செல்ல முடியுமா என்பது தெரியாது. ஏனெனில், படப்பிடிப்பு மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்ளவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. ஆனால், என் ஓட்டு அவருக்குதான்’ என சொல்லி இருக்கிறார்.

Published by
சிவா