Categories: latest news

ஜனநாயகன் படத்தில் அது மட்டும் நடக்கவே நடக்காது… அட அவரே உறுதியாகச் சொல்லிட்டாரே..!

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ஜனநாயகன். இது விஜயின் கடைசி படம் என அறிவித்துள்ளதால் ரசிகர்களும் சரி. மற்றவர்களும், அரசியல் பிரபலங்களும் சரி. பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்தப் படம் வரும் ஜன.9, 2026 பொங்கல் தினத்தையொட்டி வெளியாகிறது.

விஜய் நடிக்கும் போர்ஷன் முடிந்து விட்டது. அதனால் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாதவாறு பார்த்துக் கொள்கிறார். அதே நேரம் படத்திற்கான விழாக்களிலும் அவர் கலந்து கொள்ள மாட்டார். படம் வெளியாவதற்கு 1 மாதத்திற்கு முன்புதான் புரொமோஷன் வேலைகளில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது. அந்த வகையில் படத்தைப் பற்றிய செய்திகள் இப்போது வெளியானால் தனது கட்சியைச் சேர்ந்தவர்களுக்குக் கவனம் அங்கு போய்விடும்.

அதனால் கட்சிப்பணிகள் நடக்காது என்பதிலும் உறுதியாக இருக்கிறார் என்றே தெரிகிறது. சமீபத்தில் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிலும் அரசியலைப் பற்றிப் பேசினார். வரும் தேர்தலுக்கு வண்டி வண்டியா பணத்தைக் கொண்டு வருவாங்க. உஷாரா இருங்க. அது உங்ககிட்ட கொள்ளையடிச்ச பணம்தான்னு சொல்லி இருக்கிறார் விஜய்.

அந்த வகையில் இவரது ஜனநாயகன் படம் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பதில் சொல்லி இருக்கிறார். என்னன்னு பாருங்க.

2007ல் வெளியான இந்திப்படம் ஓம் சாந்தி ஓம்ல வர்ற ஒரு பாடல்லஎல்லா நடிகர்களும் சேர்ந்து நடிச்சிருப்பாங்க. அதே மாதிரி விஜயின் கடைசி படமான ஜனநாயகன்ல எல்லா நடிகர்களும் சேர்ந்து நடிக்கிறதுக்கான வாய்ப்புகள் இருக்கான்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

ஓம் சாந்தி ஓம் படத்தில் இடம்பெற்றது மாதிரி விஜயின் கடைசி படமான ஜனநாயகனில் எல்லா நடிகர்களும் சேர்ந்து நடிக்கிறதுக்கான வாய்ப்பு அறவே இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன். அதுக்கு முக்கியமான காரணம் அடுத்து அரசியலில் இறங்கப் போறேன்னு விஜய் அறிவித்துள்ள அறிவிப்பு தான். அவர் அரசியல்ல இறங்குறதுனால அவர் படத்துல நடிச்சா என்னென்ன பிரச்சனைகள் வருமோ அப்படிங்கற தயக்கம் இங்குள்ள பல கலைஞர்களுக்கு இருக்குமோன்னு தான் நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

1 hour ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

2 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

3 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

6 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

19 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

19 hours ago