‘இந்தியன் 2’ படம் மட்டும் இல்ல.. ஏற்கனவே கமலின் அந்த படத்தோட மோதிய பார்த்திபன்.. அந்த ரிசல்ட் என்ன தெரியுமா?

by ராம் சுதன் |

பல பேர் சொல்லியும் படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து பிரம்மாண்டத்தோடு மோதிய டீன்ஸ் திரைப்படம் குறித்தும் தன்னுடைய அனுபவங்கள் பற்றியும் சமீபகாலமாக பார்த்திபன் பேட்டியில் கூறி வருகிறார். சமீபத்தில் தான் பார்த்திபன் இயக்கி நடித்த டீன்ஸ் திரைப்படம் வெளியானது .இந்தியன் 2 திரைப்படத்தோடு நேருக்கு நேர் மோதிய இந்த டீன்ஸ் திரைப்படம் முதல் நாளில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது .

ஆனால் இப்போது பார்த்திபன் தனது இணையதள பக்கத்தில் ‘முதல் நாள் கூட்டமே இல்லை. இரண்டாவது நாள் டிக்கெட்டே இல்லை’ என்ற அளவுக்கு அவருடைய மகிழ்ச்சியான தருணத்தை டீன்ஸ் திரைப்படம் பற்றி பகிர்ந்திருக்கிறார். ஏனெனில் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த திரைப்படம் இந்தியன் ௨.

ஆனால் அந்த எதிர்பார்ப்பை சுக்குநூறாக்கிய திரைப்படமாக இப்போது மாறி இருக்கிறது. இந்தியன் படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இந்தியன் 2 திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை என்றுதான் அனைவரும் கூறி வருகிறார்கள். அதனால் டீன்ஸ் திரைப்படத்தை நோக்கி ரசிகர்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

இந்த நிலையில் பார்த்திபனிடம் இதைப் பற்றி கேட்டபோது இன்னும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்தார். அதாவது ‘நான் சினிமாவில் கொஞ்சம் கேப் எடுத்துக் கொண்டால் சுற்றி இருப்பவர்கள் என்னை பற்றி பார்த்திபன் கேமரா இல்லாமல் படம் எடுக்கக் கூடியவர்.

மனிதர்கள் இல்லாமல் படம் எடுக்கக்கூடியவர் என்றெல்லாம் புதுப்புது தகவல்களை கூறி வருகிறார்கள். இருந்தாலும் ஏதாவது ஒரு வித்தியாசத்தை சினிமாவில் புகுத்த வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு நடிகராக வேண்டும் என்ற ஆசையில் தான் வந்தேன்.

ஆனால் அதன் பிறகு என்னோட புத்திசாலித்தனம் இயக்குனராக வேண்டும் என்ற பாதையை நோக்கிச் சென்றது. என்னுடைய ஸ்க்ரிப்டுக்கு யாருமே நடிக்க வராத பட்சத்தில் நானே நடித்த திரைப்படம் தான் புதிய பாதை. அந்த திரைப்படம் வெளியாகும் நேரத்தில் தான் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படமும் வெளியானது.

அந்த நேரமும் என்னை அனைவரும் திட்டினார்கள். ஏன் கமல் படத்தோட போட்டி போடுகிறாய் என. ஆனால் அங்கு என்னுடைய ஒரு புத்திசாலித்தனம் வேலை செய்தது .கமல் சார் படம் மட்டுமல்ல. ரஜினி சாரின் சிவா படமும் வெளியானது. அப்போது நான் என்னுடைய படத்தை விளம்பரம் செய்ய ’யானைக்கு சோறு ஊட்டும் போதும் அதில் ஒரு பருக்கை விழுந்தால் ஆயிரம் எறும்புக்கு தீனி’என்ற வகையில் எல்லாரும் அவர்கள் படத்துக்கு போங்க.

டிக்கெட் இல்லைனு ப்ளாக்ல டிக்கெட் வாங்காதீங்க. வீட்டுக்கும் போகாதீங்க. உங்களிடம் இருக்கும் காசை வைத்து புதிய பாதை படத்திற்கு வாங்க. அந்த பணத்திற்கு என்னால் திருப்தி படுத்த முடியும் என்று விளம்பரம் செய்திருந்தாராம். மறு நாளில் இருந்து கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள் .

ரஜினியும் ஒரு ஐந்து வருடம் கழித்து ‘யானை சாப்பிட்டதோ இல்லையோ கடைசியில் அந்த எறும்பே தின்னுட்டு போயிடுச்சு’ என்று சொன்னாராம், அதே போல் இந்த இந்தியன் ௨ படத்தில் போட்டி போடும் போது டிக்கெட் விலையையே குறைத்து விட்டேன். ஆனால் எதிர்பார்த்து வராதீர்கள் என்றும் சொல்லிவிட்டேன் என பார்த்திபன் கூறினார்.

Next Story