Amaran vs Goat: சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் தளபதி விஜயின் கோட் திரைப்படத்தின் வசூலை காலி செய்து இருக்கிறது.
சோனி பிக்சர்ஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த திரைப்படம் அமரன். இப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். மறைந்த முன்னாள் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
முகுந்தாக சிவகார்த்திகேயன், இந்து ரெபேக்கா வர்க்கீஸாக சாய் பல்லவி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். எஸ் கே மற்றும் சாய் பல்லவி இருவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பு செய்து இருக்கிறார்.
படம் வெளியாகிய முதல் நாளிலிருந்து இன்று வரை ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. நான்கு நாட்கள் கடந்திருக்கும் நிலையில் இதுவரை தமிழகத்தில் அமரன் திரைப்படம் 50 கோடி வசூலை கடந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் மொத்த வசூல் 150 கோடியை தாண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் அமரன் திரைப்படம் நான்கு நாட்களில் 16 கோடி வசூல் செய்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆனால் செப்டம்பர் 5ஆம் தேதி தளபதி விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் தமிழகத்தில் 200 கோடி வசூலை தாண்டினாலும் தெலுங்கானாவில் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யப்படவில்லை. இப்படத்தின் மொத்த தெலங்கானா வசூலே 12.4 கோடி மட்டுமே எனக் கூறப்படுகிறது.
இதன் மூலம் அமரன் திரைப்படம் தாண்டி இருக்கிறது. மேலும் இந்த வசூல் மிகப்பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…