Categories: latest news

Amaran: இந்துவுக்கு மட்டும் ‘சிலுவை’ தெரியுது… முகுந்துக்கு ஏன் மறைச்சீங்க?..

Amaran: மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமான அமரனில் சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக முடிவு முன்பே தெரிந்தாலும் கூட, படத்தினை சாய் பல்லவி தன்னுடைய நடிப்பால் தாங்கிப் பிடித்து இருக்கிறார்.

அவரைத்தவிர வேறு ஒருவர் இந்த படத்தில் நடித்திருந்தால் கண்டிப்பாக படம் இவ்வளவு நன்றாக வந்திருக்காது என விமர்சகர்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர். படம் வெளியாகி 5 நாட்கள் ஆகியும் பாக்ஸ் ஆபிசில் வசூலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

குறைவான நாளிலேயே 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து படம் புதிய சாதனை படைத்துள்ளது. நீண்ட நாட்களாக தடுமாறிய கோலிவுட்டையும் சற்று தூக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் படத்தில் மேஜர் முகுந்த் பிராமணர் வகுப்பை சேர்ந்தவர் என்பதை மறைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்துவாக வந்த சாய் பல்லவி கழுத்தில் சிலுவையுடன் வருகிறார். ஆனால் முகுந்தாக வரும் சிவகார்த்திகேயன் எந்த அடையாளமும் இன்றி காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறார் என, பலரும் சமூக வலைதளங்களில் வெறுப்பை கக்கினர்.

இதற்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி நேற்று நடைபெற்ற ‘அமரன்’ படத்தின் வெற்றி விழாவில் பதில் அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர், ‘ முகுந்தின் குடும்பத்தினர் அவர் ஒரு இந்தியன். தமிழன் என்று மட்டும் காட்சிகள் வைத்தால் போதும். முகுந்த் எப்போதும் இந்தியன்னு மட்டும் தான் அடையாளப்படுத்திக்க விரும்புவான் என்று கேட்டுக் கொண்டனர். அதனால் தான் அவரின் அடையாளங்களை படத்தில் காட்டவில்லை,” என்றார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் இந்த விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

7 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

8 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago