Connect with us

Amaran: ஆஹா ஓஹோன்னு சொன்னாங்க!… தமிழ்நாட்டுல அமரன் படத்தின் கலெக்சன் இவ்வளவுதானா!…

latest news

Amaran: ஆஹா ஓஹோன்னு சொன்னாங்க!… தமிழ்நாட்டுல அமரன் படத்தின் கலெக்சன் இவ்வளவுதானா!…

தமிழகத்தில் அமரன் திரைப்படம் இதுவரை செய்த வசூல் தொடர்பான அப்டேட் வெளியாகி இருக்கின்றது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. மேலும் கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது.

இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி இருவரது சினிமா கெரியரிலும் இந்த திரைப்படம் மிக முக்கிய படமாக அமைந்திருக்கின்றது.

படம் வெளியானது முதலே திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தொடர்ந்து வசூல் ரீதியாகவும் படம் சக்க போடு போட்டு வருகின்றது. பாக்ஸ் ஆபிஸில் இந்த திரைப்படம் 4 நாட்களில் மட்டும் 150 முதல் 170 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

வரும் நாட்களில் மேலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சிவகார்த்திகேயன் திரைப்படங்களிலேயே 200 கோடி வசூல் செய்த படமாக அமரன் திரைப்படம் இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் மட்டும் 3 நாட்களில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அது உண்மை இல்லையாம். அமரன் திரைப்படம் 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 77 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

ஆனால் அதற்கு முன்னதாக 3 நாட்களில் 100 கோடி வசூல் என்று புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள். ஆனால் அமரன் திரைப்படம் இதுவரை தமிழகத்தில் 77 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாகவும் சிவகார்த்திகேயனின் எந்த திரைப்படமும் இவ்வளவு குறுகிய நாட்களில் இவ்வளவு வசூலை செய்ததில்லை என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் கெரியரில் அமரன் திரைப்படம் தான் உச்சத்தில் இருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top