Categories: latest news

Amaran: 4 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய அமரன்… எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் மூன்று திரைப்படங்கள் வெளியாகியது. இதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகின்றது. படம் வெளியானது முதலே தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வந்தது. இதனால் 4 நாள் விடுமுறையில் மக்கள் அமரன் திரைப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்குக்கு படையெடுக்க தொடங்கினர்.

நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து அமரன் திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. இந்த திரைப்படத்தை கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அதேபோல் அவரது மனைவியாக சாய்பல்லவி தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சிவகார்த்திகேயனுக்கு படத்தில் எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ? அதே அளவிற்கு வரவேற்பு நடிகை சாய் பல்லவிக்கும் இருந்தது. அதைத்தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கு வலு சேர்த்தது ஜிவி பிரகாஷின் பின்னணி இசை.

இப்படத்தில் பிஜிஎம் மற்றும் பாடல்கள் அனைத்துமே மிகச் சிறப்பாக இருந்தது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ் சினிமாவில் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் செய்த படங்களிலே அதிக தியேட்டர்களில் ரிலீசானது அமரன் திரைப்படம் தான். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 800க்கும் மேற்பட திரையரங்குகளில் இப்படம் ரிலீசானது.

மேலும் வெளிமாநிலங்களை கணக்கில் வைத்தால் 1000 முதல் 1200 தியேட்டர்களில் இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. முதல் நாள் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் ஆகியிருந்தன. முதல் நாளில் அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் 42.3 கோடி வசூல் செய்ததாக படக்குழுவினரே தெரிவித்திருந்தார்கள். அதேபோல் நவம்பர் 3ஆம் தேதி அதாவது நேற்று வரை பல திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்லாகி இருந்தது.

இதனால் பாக்ஸ் ஆபிஸில் படத்தின் வசூல் உயர்ந்திருக்கின்றது. அந்த வகையில் அமரன் திரைப்படம் 4 நாட்களில் சுமார் 130 கோடியிலிருந்து 135 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. முதல் நான்கு நாட்களிலேயே படம் இவ்வளவு தொகையை வசூல் செய்திருப்பதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். விரைவில் இப்படம் 200 கோடி வசூல் செய்து சிவகார்த்திகேயனுக்கு ஒரு சிறந்த படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ராம் சுதன்

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

1 hour ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

11 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

12 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

19 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

20 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

21 hours ago