ராயனை காலி செய்த அமரன்... ப்ரீ புக்கிங்கில் தரமான சம்பவம் செய்யும் சிவகார்த்திகேயன்!..
நாளை தீபாவளி பண்டிகை, தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்பு அதைத் தாண்டி நமக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்களை திரையரங்குகளில் சென்று பார்ப்பது. நாளை தமிழகத்தில் மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர், கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ப்ளடிபக்கர். அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அமரன்.
தீபாவளிக்கு ரிலீசாக உள்ள திரைப்படங்களிலேயே அதிகம் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படம் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தான். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வீரர் முகுந்து வரதராஜன் தமிழகத்தை சேர்ந்தவர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் அவர்களை பத்திரமாக காப்பாற்றி விட்டு தன் இன்னுயிரை தியாகம் செய்தார் முகுந்த் வரதராஜன். அவர் உடல் ராணுவ மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டபோது பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இவரது வாழ்க்கை வரலாற்றினை மையமாக வைத்து ராஜ்குமார் பெரியசாமி அமரன் திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இதில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் தீபாவளியான நாளை ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது.
இந்த திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜன் எங்கெல்லாம் சென்றவரோ அங்கேயே சென்று எடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் அனுமதி வாங்கி இந்திய ராணுவ தளவாடங்களுக்கு சென்று படக்குழுவினர் இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கிகளை கையாளுவதற்கு என்றே தனியாக பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
நாளை அமரன் திரைப்படம் ரிலீஸ்-ஆக உள்ள நிலையில் உலகம் முழுவதும் ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. அந்த வகையில் இன்று அமரன் திரைப்படம் 6.5 கோடி ரூபாய் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த வசூலானது தனுஷ் இயக்கி நடித்து இருந்த ராயன் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூலை விட அதிகம் என்று கூறப்படுகின்றது. இந்த செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கட்டாயம் சிவகார்த்திகேயனின் இந்த திரைப்படம் அவரின் சினிமா கேரியரில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.