1. Home
  2. Cinema News

SK-க்கு ஒரு ஹிட் பார்சல்... ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் அமரன்... இத்தனை கோடி வசூலா...?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் ஃப்ரீ புக்கிங் வசூல் வேட்டை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் சிவகார்த்திகேயன். சமீப நாட்களாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதனால் அடுத்தடுத்து இயக்குனர்கள் இவரை வைத்து படமெடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கின்றார். நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர் மேஜர் முகுந்து வராதராஜன் தமிழகத்தை சேர்ந்தவர்.

2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் மக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மேஜர் முகுந்து வரதராஜன் வீர மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை மற்றும் காதலை மையமாக வைத்து படமாக எடுத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கின்றார். இந்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. மேலும் படக்குழுவினர் தொடர்ந்து படத்தின் பிரமோஷன்களுக்காக ஹைதராபாத், துபாய், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் தனி மதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இப்படி பலரின் பாராட்டைப் பெற்ற திரைப்படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அக்டோபர் 31ஆம் தேதி இப்படம் ரிலீஸ்-ஆக உள்ள நிலையில் ப்ரீ புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதுவரையில் ப்ரீ புக்கிங்கில் மட்டும் 4 கோடிக்கு மேல் அமரன் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.