அம்பிகாவை அந்த விஷயத்துக்கு அழைத்த கமல்… கடுப்பாகி திட்டிய சுவாரஸ்ய சம்பவம்
Kamalhassan: பொதுவாகவே உலகநாயகன் கமல்ஹாசன் தன்னுடைய திரைப்படங்களில் எல்லா வேலைகளையும் அவரை செய்வது தான் வழக்கம். அப்படி ஒரு முறை தன்னுடைய சக நடிகையான அம்பிகாவிடம் ஒரு விஷயத்துக்கு அவர் வாங்கிய திட்டு குறித்த சுவாரசிய சம்பவம் வெளியாகி இருக்கிறது.
குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அடி எடுத்து வைத்தவர் நடிகர் கமல்ஹாசன். அவருடைய வளர்ச்சி முதலில் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை. குழந்தை நட்சத்திரமாக வெற்றி கண்டாலும் இளைஞராக அவர் தமிழ் சினிமாவிற்குள் வாய்ப்புக்களை பெற பெரிய போராட்டமே நடத்தினார்.
அப்படி அவர் போராடி ஹீரோவாக கோலிவுட்டில் அடி எடுத்து வைத்தார். தொடர்ச்சியாக வெற்றி படங்களை குவித்தார். சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் வருவதற்கு முன்னரே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தவர் நடிகர் கமல்ஹாசன் தான்.
அவருடைய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வராதா என ஒவ்வொரு நடிகையையும் ஏங்கிய நிலை கூட இருந்து வந்தது. அப்படி அந்த காலத்தில் அவருடன் பிரபல நடிகைகள் தொடர்ச்சியாக பல படங்களில் ஜோடியாக நடித்து வருவதும் வழக்கமாக இருந்தது.
அந்த லிஸ்டில் முக்கிய இடம் பிடித்தவர் தான் நடிகை அம்பிகா. கமல்ஹாசனுடன் நிறைய திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருந்தார். இருவருடைய ஹிட் படங்களின் லிஸ்ட் ரசிகர்களிடம் இன்றளவும் வைரலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கிய படம் தான் காக்கிச்சட்டை. 'வானிலே தேனிலா’ சாங் ஷூட்டில் ஒரு முக்கியமான ஸ்டெப்பை கமலுடன் சேர்ந்து அம்பிகாவும் ஆடும்படி பிளான் செய்திருக்கிறார்கள். நேரம் குறைவாக இருந்த சமயத்தில், 'நான் அந்த ஸ்டெப்பை போட்டா லேட்டாகி டைரக்டர்கிட்ட திட்டுதான் வாங்கணும்’ என அம்பிகா சொல்லவே, அதன்பிறகே கமல் மட்டும் அந்த ஸ்டெப்பை போடும்படி மாற்றி எடுத்தார்களாம்.