Kamalhassan: பொதுவாகவே உலகநாயகன் கமல்ஹாசன் தன்னுடைய திரைப்படங்களில் எல்லா வேலைகளையும் அவரை செய்வது தான் வழக்கம். அப்படி ஒரு முறை தன்னுடைய சக நடிகையான அம்பிகாவிடம் ஒரு விஷயத்துக்கு அவர் வாங்கிய திட்டு குறித்த சுவாரசிய சம்பவம் வெளியாகி இருக்கிறது.
குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அடி எடுத்து வைத்தவர் நடிகர் கமல்ஹாசன். அவருடைய வளர்ச்சி முதலில் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை. குழந்தை நட்சத்திரமாக வெற்றி கண்டாலும் இளைஞராக அவர் தமிழ் சினிமாவிற்குள் வாய்ப்புக்களை பெற பெரிய போராட்டமே நடத்தினார்.
அப்படி அவர் போராடி ஹீரோவாக கோலிவுட்டில் அடி எடுத்து வைத்தார். தொடர்ச்சியாக வெற்றி படங்களை குவித்தார். சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் வருவதற்கு முன்னரே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தவர் நடிகர் கமல்ஹாசன் தான்.
அவருடைய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வராதா என ஒவ்வொரு நடிகையையும் ஏங்கிய நிலை கூட இருந்து வந்தது. அப்படி அந்த காலத்தில் அவருடன் பிரபல நடிகைகள் தொடர்ச்சியாக பல படங்களில் ஜோடியாக நடித்து வருவதும் வழக்கமாக இருந்தது.
அந்த லிஸ்டில் முக்கிய இடம் பிடித்தவர் தான் நடிகை அம்பிகா. கமல்ஹாசனுடன் நிறைய திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருந்தார். இருவருடைய ஹிட் படங்களின் லிஸ்ட் ரசிகர்களிடம் இன்றளவும் வைரலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கிய படம் தான் காக்கிச்சட்டை. `வானிலே தேனிலா’ சாங் ஷூட்டில் ஒரு முக்கியமான ஸ்டெப்பை கமலுடன் சேர்ந்து அம்பிகாவும் ஆடும்படி பிளான் செய்திருக்கிறார்கள். நேரம் குறைவாக இருந்த சமயத்தில், `நான் அந்த ஸ்டெப்பை போட்டா லேட்டாகி டைரக்டர்கிட்ட திட்டுதான் வாங்கணும்’ என அம்பிகா சொல்லவே, அதன்பிறகே கமல் மட்டும் அந்த ஸ்டெப்பை போடும்படி மாற்றி எடுத்தார்களாம்.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…