மரியாதை தெரியாதா? அனிருத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:31  )

Anirudh: தமிழில் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். இவருக்கு தான் தற்போது கோலிவுட்டில் மவுசு அதிகரித்துள்ள நிலையில் அவருக்கு ஏற்பட்டு இருக்கும் திடீர் தலைவலி குறித்து பேசி இருக்கிறார்.

அனிருத் தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ச்சியாக சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தது.

தமிழ் மட்டுமல்லாமல் தற்போது அனிருத் இந்தி, தெலுங்கு மொழிகளிலும் இசையமைத்து வருகிறார். இப்படங்களும் சினிமா ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனிருத் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறி இருக்கிறார்.

விஜய், அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு இசையமைக்க அனிருத்தை தேடுவது வழக்கமாகி இருக்கிறது. அந்த அளவுக்கு அனிருத் ஆதிக்கம் அதிகமாகி இருக்கிறது.

இந்நிலையில் அனிருத் தன்னுடைய படங்கள் குறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசும்போது, தெலுங்கு படம் செப்டம்பர் 27, அக்டோபர் 10 வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் 2025 பொங்கல், கூலி, ஷாருக்கான் திரைப்படம் என வரிசையாக இருக்கிறது.

இதுக்கே எனக்கு தலைவலி வந்துவிட்டது. இன்னும் படங்கள் இருக்கு ஆனால் அதை இப்போது சொல்ல முடியாது. அடுத்த 10 மாதத்தில் நான் இன்னும் 50 பாடல்கள் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதில் ஷாருக்கான் சார் என தெரிவித்த அனிருத் அஜித் எனக் குறிப்பிட்டது தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அனிருத் பெரிய இடத்துக்கு போனால் மரியாதை குறைந்து விடுமா என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Next Story