ஐ யம் ஒரே பிஸி!.. அத நினைச்சா இப்பவே தலைவலி வருது!.. அனிருத் செம பில்டப்!..
Anirudh: நடிகர் ரஜினியின் உறவினர் மகன் அனிருத் ரவிச்சந்திரன். சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்டவர் ஒரு கட்டத்தில் இசையமைப்பாளராகவும் மாறினார். தனுஷுக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து உருவாக்கிய ஆல்பம் பாடலான ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாடல் யுடியூப்பில் சூப்பர் ஹிட் அடித்தது.
அதன்பின்னர் இந்த பாடலை 3 படத்திலும் சேர்த்தார்கள். அதன்பின் தனுஷின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்க துவங்கினார் அனிருத். அப்படி அவர் இசையமைத்த மாரி, வேலை இல்லா பட்டதாரி போன்ற படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்து அனிருத் - தனுஷ் கூட்டணி நிறைய ஹிட் பாடல்களை கொடுத்தது.
அதன்பின் விஜய், அஜித், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பலரின் படங்களுக்கும் இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்தார் அனிருத். ஒருகட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மானையும் ஓவர்டேக் செய்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக மாறினர். அதேநேரம், ஒருகட்டத்தில் தனுஷ் - அனிருத் கூட்டணி பிரிந்தது.
அதன்பின் சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்தார் அனிருத். மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து உருவான ஜவான் படத்திலும் இசையமைத்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் பேன் இண்டியா அளவிலும் பிரபலமானார் அனிருத்.
ரஜினியின் தர்பார், ஜெயிலர், வேட்டையன் படங்களுக்கும் அனிருத்தே இசையமைத்தார். இதில், ஜெயிலர் பட பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. கமலுக்கு விக்ரம் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களுக்கும் அனிருத்தே இசையமைத்திருக்கிறார். அதோடு, ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படத்திற்கு இசையமைத்து தெலுங்கு சினிமா பக்கமும் போயிருக்கிறார் அனிருத்.
மேலும், அடுத்து விஜயின் படம், அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் கூலி படங்களுக்கும் அனிருத்தான் இசை. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அனிருத் ‘அடுத்த 10 மாதங்களில் மொத்தம் 50 பாடல்கள் இசையமைக்க வேண்டியிருக்கிறது. அதை நினைத்தால் இப்போதே எனக்கு தலைவலி வருகிறது’ என சிரித்துக்கொண்டே சொல்லி இருக்கிறார்.