லோகேஷ் இயக்கும் LCU ஷார்ட் பிலிம்... இசையமைப்பாளர் யாருன்னு தெரியுமா..?

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் குறுகியளவு திரைப்படங்களை இயக்கி மிகப் பிரபல இயக்குனராக வளம் வருபவர் லோகேஷ் கனகராஜ். தமிழில் 2017 ஆம் ஆண்டு சந்தீப் கிட்சன், ரெஜினா, ஸ்ரீ ஆகியோர் நடிப்பில் வெளிவந்த மாநகரம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் முதல் திரைப்படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் இவரை ஒரு சிறந்த இயக்குனராக முன்னெடுத்தது. பின்னர் மூன்றாவது திரைப்படத்திலேயே நடிகர் விஜய் வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி கமலஹாசனுக்கு மிகச் சிறந்த கம்பேக்கை உருவாக்கினார்.

இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப் பிரபலமாக பேசப்பட்டது. இப்படத்தின் மூலமாக பாலிவுட் வரை பிரபலமானார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக லியோ என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக ஒரு வெற்றி படமாக அமைந்தது. லோகேஷ் கனகராஜன் படங்கள் அனைத்தும் LCU-வில் அடங்கும்.

இதைத்தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2 ஆகிய படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தை இயக்கி முடித்துவிட்டு கைதி 2 திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படம் எல்சியூ-வில் அல்லாமல் தனி படமாக உருவாகி வருகின்றது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் லோகேஷ் கனகராஜ் எல்சியு உருவான விதம் குறித்து ஒரு பத்து நிமிட குறும்படத்தை உருவாக்கி வருகின்றார்.

இதற்கு சாப்டர் ஜீரோ என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த குறும்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருக்கின்றாராம். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் தனது திரைப்படங்கள் அனைத்திலும் அனிருத் தான் வாய்ப்பு கொடுத்து வரும் நிலையில் தற்போது சாப்டர் ஜீரோ குறும்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க இருக்கின்றார் என்கின்ற தகவல் வெளியாகியிருக்கின்றது.

இந்த செய்தி அவரின் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் அனிருத் புதிதாக ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் அது இப்படம் வெளியான பிறகு மிகப்பெரிய அளவில் பேசப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Story