கவின் தலையில் மண்ணை போட்ட அனிருத்!.. பல கோடி பட்ஜெட்டு பாத்து பண்ணுப்பா!...
விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். இவருக்கு பெண் ரசிகைகளும் உருவானார்கள். சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக கிளிக் ஆகவில்லை. பிக்பாஸ் வீட்டில் நடன இயக்குனர் சாண்டியுடன் இணைந்து அவர் அடித்த லூட்டி ரசிகர்களுக்கு பிடித்துபோனது.
அந்த வீட்டில் இருக்கும்போது லாஸ்லியாவை காதலித்தார். ஆனால், அது பிரேக்கப்பில் முடிந்தது. லாஸ்லியாவுக்கு முன் பிரியா பவானி சங்கருடன் அவருக்கு காதல் இருந்ததாகவும், அதுவும் பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் நடித்து வெளியான லிஃப்ட் திரைப்படம் ஓரளவுக்கு ஓடியது.
அதன்பின் வெளியான டாடா படமும் நல்ல வசூலை பெற்றது. இந்த படத்தின் வெற்றி கவினுக்கு ஒரு மார்க்கெட்டை உருவாக்கியது. இவரை வைத்து படம் எடுக்கலாம் என்கிற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு வந்தது. எனவே, தொடர்ந்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
டாடா படத்திற்கு பின் ஸ்டார் படம் வெளியானது. இந்த படத்திற்கு ஏகப்பட்ட புரமோஷன் செய்தார்கள். ஆனால், படம் எதிர்பார்த்த அளவு இல்லை. எனவே, பி,சி செண்டர்களில் படம் காத்து வாங்கியது. அதன்பின் நடன இயக்குனர் சதீஷின் இயக்கத்தில் ‘கிஸ்’ என்கிற படத்தில் நடித்தார் கவின்.
மேலும், ‘மாஸ்க்’ என்கிற படத்திலும் இயக்குனர் நெல்சனின் தயாரிப்பில் ‘பிளடி பெக்கர்’ என்கிற படத்திலும் நடித்தார். கிஸ் படத்திற்கு அனிருத் இசை என முடிவானது. ஆனால், இப்போது வரை ஒரு பாடலையும் அனிருத் போட்டு கொடுக்கவில்லை. ஏனெனில், வேட்டையன், இந்தியன் 2 என கையில் பெரிய படங்கள் வந்ததால் கவினை டீலில் விட்டார் அனிருத்.
இப்போது அவரின் பாடல்களுக்காக காத்திருக்கிறது கிஸ் படக்குழு. அவர் பாடல்களை கொடுத்தபின் அதை காட்சியாக எடுப்பார்கள். அதன்பின்னரே படம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறத. அனிருத் எப்போது பாட்டு போட்டு கொடுப்பார் என காத்திருக்கிறார் கவின். சுமார் 10 கோடி பட்ஜெட்டில் கிஸ் படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.