கடந்த சில தினங்களாக சமூக வலைதள பக்கங்களை திறந்தாலே நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் பேச்சுதான் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதிலும் இயக்குனர் மகிழ் திருமேனி பேட்டி தொடர்பான வீடியோக்கள் தான் அதிக அளவு உலா வருகின்றன. அவர் பேட்டியில் கூறும் விஷயங்கள் மற்றும் நடிகர் அஜித் குறித்து அவர் சொல்லும் தகவல்கள் அனைத்துமே அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கின்றது என்றே கூறவேண்டும்.
ஒரு பக்கம் அவர் மீது பல தினங்களாக அஜித் ரசிகர்கள் கோபத்தில் இருந்தாலும் அவரின் பேட்டியை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் அஜித்தை திரையரங்குகளில் காணாமல் வாடி போய் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு விடாமுயற்சி திரைப்படம் ஒரு பண்டிகை தான்.
இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என எண்ணியிருந்த நிலையில் லைக்கா நிறுவனம் கடைசி நேரத்தில் கையை விரித்துவிட்டது. அதன் பிறகு இருந்த பஞ்சாயத்து அனைத்தையும் முடித்துவிட்டு படத்தை பிப்ரவரி 6-ம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனால் படத்தின் புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
பொதுவாக நடிகர் அஜித் திரைப்படங்கள் என்றாலே அதற்கு நிச்சயம் ஆடியோ லான்ச் இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருப்பினும் படம் குறித்து புரமோஷன் செய்ய வேண்டும் என்பதற்காக அந்த வேலையை விறுவிறுப்பாக செய்து வருகின்றார் மகிழ் திருமேனி. இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்க காரணம் படத்தில் இருந்து வெளியான பாடல், டீசர், டிரெய்லர் அனைத்தும் தான்.
இதுவரை பார்த்திராத அஜித்தை இந்த திரைப்படத்தில் பார்க்க முடியும் என்று பலரும் கூறி வருகிறார்கள். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கின்றார். மேலும் ஆரவ், அர்ஜுன், ரெஜினா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கின்றார். படத்தின் பிஜிஎம், பாடல்கள் அனைத்துமே மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை பார்த்த அனிருத் என்ன கூறி இருக்கின்றார் என்பதை குறித்து பகிர்ந்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘இப்படத்தில் இருக்கும் பாடல்கள் அனைத்துமே மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது. அதற்கு காரணம் அனிருத் தான்.
இந்த திரைப்படத்தை விடாமுயற்சி படக்குழுவை சேர்ந்த அனைவரும் பார்த்து விட்டார்கள். அதேசமயம் அனிருத்தும் இப்படத்தை பார்த்தார். படத்தைப் பார்த்துவிட்டு என்னிடம் படம் செம பிளாஸ்டாக இருக்கின்றது. நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று கூறினார். அந்த வார்த்தையை கேட்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது’ என்று அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார் மகிழ் திருமேனி.
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…