Categories: Cinema News latest news

அஜித்தின் புது படத்துக்கு இசையமைப்பாளர் இவர்தான்!.. டேக் ஆப் ஆகும் AK 64..

AK64: அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். அஜித்தின் முந்தைய படமான விடாமுயற்சி அஜித் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் குட் பேட் அக்லி ரசிகர்களை திருப்திப்படுத்தியது. இந்த படம் தியேட்டரில் வசூல் செய்தாலும் சொன்ன பட்ஜெட்டை விட ஆதிக் அதிக செலவு செய்ததால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்தது.

அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அஜித்தின் சம்பளம் 180 கோடி, படத்தின் பட்ஜெட் 300 கோடி என்றதால் அந்நிறுவனம் பின்வாங்கிவிட்டது. பல தயாரிப்பாளர்களுக்கு வலைவீசியும் யாரும் சிக்கவில்லை.

அதன்பின் அப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பது உறுதியானது. அஜித் இப்போது கார் ரேஸில் இருக்கிறார். புது படத்திற்கு வருகிற அக்டோபர் முதல் பிப்ரவரி வரை கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே வேதாளம், விவேகம், விடாமுயற்ச்சி போன்ற அஜித்தின் படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் ஷுட்டிங் அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது. குட் பேட் அக்லி படம் போல இப்படம் கேங்ஸ்டர் படமாக இருக்காது என ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா