சிம்புவுக்கு 'No' தனுஷுக்கு 'Yes'ஆ.. பாரபட்சம் பார்க்கும் அனிருத்.. இது என்ன பிரச்சனை?...

by ramya suresh |
சிம்புவுக்கு No தனுஷுக்கு Yesஆ.. பாரபட்சம் பார்க்கும் அனிருத்.. இது என்ன பிரச்சனை?...
X

Music Director Anirudh: தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வருபவர் அனிருத். தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களை கையில் வைத்திருக்கின்றார். தற்போது ஒரே நேரத்தில் சுமார் 10 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து வரும் நிலையில் படு பிஸியாக இருந்து வருகின்றார் அனிருத்.

இசையமைக்கும் படங்கள்: அனிருத் தற்போது கிங்க்டம், இந்தியன் 3, கூலி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் திரைப்படம், ஜனநாயகன், ஜெயிலர் 2 என ஏகப்பட்ட திரைப்படங்களில் இசையமைத்து வரும் நிலையில் இது இல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்களில் இசையமைத்து வருவதாக கூறப்படுகின்றது. கடைசியாக இவரது இசையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சிம்புவுக்கு நோ: சிம்பு தற்போது பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எஸ்டிஆர் 49 என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. முதலில் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாக காலை முதலே தகவல் வெளியாகி வருகிறது.

சிம்புவும் அனிருத்தும் மிகச் சிறந்த நண்பர்களாக இருக்கும் நிலையில் எதற்காக சிம்புவின் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க மறுத்தார் என்பது தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக இருக்கும் எஸ்டிஆர் 51 திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்த படத்தில் இருந்தும் அவர் விலகி இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் சிம்புவுக்கும் அனிருத்துக்கும் இடையே எதோ மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

தனுசுடன் அனிருத் : அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமான காலகட்டத்தில் தனுஷின் ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனுஷ் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கின்றாராம். லப்பர் பந்து திரைப்படத்தை இயக்கிய தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.

ஏகப்பட்ட திரைப்படங்களை கையில் வைத்திருப்பதால் சிம்பு திரைப்படத்திற்கு இசையமைக்க மறுப்பு தெரிவித்த அனிருத், தனுஷ் திரைப்படத்துக்கு மட்டும் இசையமைப்பதற்கு சம்மதம் தெரிவித்தது ஏன் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Next Story