வரும் போது அது வேறமாறி இருக்கும்!.. சிம்பு காம்போ பற்றி அப்பவே சொன்ன அனிருத்!...
STR 49: தமிழ் சினிமாவில் ராக்ஸ்டார் ஆக மிகக் குறுகிய காலத்தில் உச்சம் தொட்டவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் பெரும்பாலும் பெரிய பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தொட்டதெல்லாம் பொன் என்பது போல இவர் கை வைக்கும் படங்கள் அனைத்துமே ஹிட் ஆக மாறிவிடுகின்றன.
அதாவது பாடல்கள் விஷயத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் முதன்முறையாக படத்தில் அனிருத்துடன் சிம்பு இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித் விஜய் ரஜினி கமல் தனுஷ் என பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த அனிருத் இதுவரை சிம்புவின் படங்களுக்கு இசையமைத்ததே இல்லை.
ஆனால் இருவரும் ஒரே ஒரு ஆல்பம் சாங்கில் இணைந்து பணிபுரிந்து இருக்கின்றனர். அது மிகவும் வைரலான பாடல். அதன் பிறகு இப்போது தான் படத்தில் முதல் முறையாக இருவரும் இணைய இருக்கின்றனர் .சிம்புவின் பெரும்பாலான படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார்.
இவர்கள் இருவரும் இணைந்தால் அந்தப் படம் ஹிட்டுதான் என்பது போல யுவன் சங்கர் ராஜா இசையமைத்த படங்கள் அனைத்துமே சிம்புவுக்கு ஹிட் ஆகியிருக்கின்றன. இந்த நிலையில் சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்திற்கு அனிருத் இசை அமைக்க போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது .அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் அந்த புதிய படத்திற்கு அனிருத் தான் இசை என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகின்றது.
ஆனால் இந்த படம் அடுத்த வருடம் ஆரம்பமாகும் என்றும் சொல்லப்படுகிறது .இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறதாம் .சிம்புவின் படத்திற்கு அனிருத் இசையமைத்தால் அந்த பாடல் கண்டிப்பாக 2கே கிட்ஸ்களுக்கு பிடித்தமான பாடலாகவே அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை .
இந்த நிலையில் ஒரு பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் சிம்புவும் அனிருத்தும் மேடையில் இணைந்து பேசி இருக்கிறார்கள். அப்போது அனிருத்திடம் எப்போது சிம்புவின் படத்திற்கு இசையமைக்க போகிறீர்கள் என கேட்டபோது அதற்கு அனிருத் பள்ளியில் எனக்கு சீனியர் சிம்பு.
அதனால் ஸ்கூல் கல்ச்சரில் சிம்பு பாடும்போது நான்தான் கீபோர்டு வாசிப்பேன். அந்த அளவுக்கு நானும் சிம்புவும் ரொம்ப க்ளோஸ். இத்தனை வருட காலங்களில் நிறைய படங்கள் நான் பண்ணி இருந்தாலும் எங்க காம்பினேஷனில் ஒரு படம் கூட வரவில்லை. ஆனால் கண்டிப்பா சொல்கிறேன். அது வரும்போது பயங்கரமாக வரும் என கூறியிருந்தார்.
அவர் சொன்னதைப் போல இந்த படத்தில் இருவரும் ஒன்று சேர இருக்கின்றனர். அதனால் பாடல் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.