பீப் சாங்குக்கு பின் மீண்டும் இணையும் சிம்பு - அனிருத்!.. 2k கிட்ஸ்களுக்கு கொண்டாட்டம்தான்!..
Str49: சினிமாவில் சில கூட்டணிகள் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துவதோடு வெற்றியாகவும் அமையும். செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா, தனுஷ் - ஜிவி பிரகாஷ், மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் என சொல்லிக்கொண்டே போகலாம். இருவருக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் அவுட் ஆக வேண்டும். அதுதான் முக்கியம்.
சிம்பு நடிகராக இருந்தாலும் அவருக்கு இசையில் ஆர்வமும், ஞானமும் உண்டு. சிம்புவின் பெரும்பாலான படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இருவரும் இணைந்தால் படம் ஹிட்டுதான். சிலம்பாட்டம், மன்மதன், வல்லவன், வானம், மாநாடு, என சொல்லிகொண்டே போகலாம்.
ரஜினியின் உறவினர் மகன் அனிருத். தனுஷுடன் இணைந்து ஆல்பங்களை உருவாக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர், தனுஷும், அவரும் இணைந்து உருவாக்கிய ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலகமெங்கும் ஹிட் அடித்தது. யுடியூப்பில் இந்த பாடல் பெரிய சாதனையை செய்தது.
இந்த பாடலுக்கு பின்னர்தான் யுடியூப்பில் பாடல்களை பார்க்கும் பழக்கமே ரசிகர்களுக்கு வந்தது. ஆனால், இந்த விஷயத்தில் தனுஷுக்கு சீனியர் சிம்புதான். அவர் அடிக்கடி பாடல்களை உருவாக்கி அதை வெளியிடுவார். அனிருத்தும் சிம்பும் இணைந்து உருவான பீப் சாங் சர்ச்சைக்கு உள்ளானது. சிம்பு மீது வழக்கும் தொடரப்பட்டு காவல் நிலையம் வரை போனார்.
அதோடு சரி. அதன்பின் சிம்புவும் அனிருத்தும் இணையவே இல்லை. இதுவரை சிம்புவின் படத்திற்கு அனிருத் இசையமைத்ததே இல்லை. ஆனால், இப்போது அதற்கான சூழல் அமைந்திருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தில் இசையமைக்குமாறு அனிருத்திடம் பேசி வருகிறார்களாம்.
அனிருத் இசையில் சிம்பு பாடல் பாடினால் கண்டிப்பாக அது 2k கிட்ஸ்களின் தேசிய கீதமாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. தன் கையில் டஜன் கணக்கில் படங்கள் வைத்திருந்தாலும் சிம்புவுக்காக இப்படத்தில் இசையமைக்க அனிருத் சம்மதிப்பார் என்றே கணிக்கப்படுகிறது.