Categories: latest news

பீப் சாங்குக்கு பின் மீண்டும் இணையும் சிம்பு – அனிருத்!.. 2k கிட்ஸ்களுக்கு கொண்டாட்டம்தான்!..

Str49: சினிமாவில் சில கூட்டணிகள் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துவதோடு வெற்றியாகவும் அமையும். செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா, தனுஷ் – ஜிவி பிரகாஷ், மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் என சொல்லிக்கொண்டே போகலாம். இருவருக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் அவுட் ஆக வேண்டும். அதுதான் முக்கியம்.

சிம்பு நடிகராக இருந்தாலும் அவருக்கு இசையில் ஆர்வமும், ஞானமும் உண்டு. சிம்புவின் பெரும்பாலான படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இருவரும் இணைந்தால் படம் ஹிட்டுதான். சிலம்பாட்டம், மன்மதன், வல்லவன், வானம், மாநாடு, என சொல்லிகொண்டே போகலாம்.

ரஜினியின் உறவினர் மகன் அனிருத். தனுஷுடன் இணைந்து ஆல்பங்களை உருவாக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர், தனுஷும், அவரும் இணைந்து உருவாக்கிய ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலகமெங்கும் ஹிட் அடித்தது. யுடியூப்பில் இந்த பாடல் பெரிய சாதனையை செய்தது.

இந்த பாடலுக்கு பின்னர்தான் யுடியூப்பில் பாடல்களை பார்க்கும் பழக்கமே ரசிகர்களுக்கு வந்தது. ஆனால், இந்த விஷயத்தில் தனுஷுக்கு சீனியர் சிம்புதான். அவர் அடிக்கடி பாடல்களை உருவாக்கி அதை வெளியிடுவார். அனிருத்தும் சிம்பும் இணைந்து உருவான பீப் சாங் சர்ச்சைக்கு உள்ளானது. சிம்பு மீது வழக்கும் தொடரப்பட்டு காவல் நிலையம் வரை போனார்.

அதோடு சரி. அதன்பின் சிம்புவும் அனிருத்தும் இணையவே இல்லை. இதுவரை சிம்புவின் படத்திற்கு அனிருத் இசையமைத்ததே இல்லை. ஆனால், இப்போது அதற்கான சூழல் அமைந்திருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தில் இசையமைக்குமாறு அனிருத்திடம் பேசி வருகிறார்களாம்.

அனிருத் இசையில் சிம்பு பாடல் பாடினால் கண்டிப்பாக அது 2k கிட்ஸ்களின் தேசிய கீதமாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. தன் கையில் டஜன் கணக்கில் படங்கள் வைத்திருந்தாலும் சிம்புவுக்காக இப்படத்தில் இசையமைக்க அனிருத் சம்மதிப்பார் என்றே கணிக்கப்படுகிறது.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

9 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

10 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

10 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

11 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

17 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

19 hours ago