லப்பர் பந்து பட நடிகையை எங்கேஜ்மென்ட் செய்த 'அண்ணா' சீரியல் நடிகர்... வைரல் போட்டோஸ்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:32:45  )

சமீப நாட்களாக சின்னத்திரையில் இருக்கும் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திடீரென்று புகைப்படங்களை வெளியிட்டு திருமணம் தொடர்பான அறிவிப்பை கூறிவிடுகிறார்கள். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி விடுகின்றது. சமீபத்தில் கூட சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் வெற்றி வசந்த் பொன்னி சீரியல் கதாநாயகி வைஷ்ணவியை காதலிப்பதாக அறிவித்து நிச்சயதார்த்தம் செய்திருந்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தது. அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு ஜோடி தங்களது காதலை அறிவித்திருக்கிறார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் கன்னத்தில் முத்தமிட்டால். இந்த சீரியலை செந்தில்குமார் என்பவர் இயக்கியிருந்தார். இதில் மணிஷாஜித், திவ்யா பத்மினி மற்றும் சந்தோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த சீரியல் 'துஜ்சே ஹை ராப்தா' என்கின்ற ஹிந்தி சீரியலை தழுவி தமிழில் எடுக்கப்பட்டது. சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிக்கப்பட்டது. இந்த சீரியல் கதாநாயகனாக நடித்து வந்த சந்தோஷ் அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது அந்த சீரியலில் இருந்து விலகிய சந்தோஷ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர் பிளாக் ஷீப் வீடியோக்கள் மற்றும் கனாக்காணும் காலங்கள் போன்றவற்றில் நடித்து பிரபலமான மௌனிகாவை பல வருடங்களாக காதலித்து வந்தார். நடிகை மௌனிகா வெள்ளித்திறையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற லப்பர் பந்து என்கின்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர்கள் இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இவர்களின் எங்கேஜ்மென்ட் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Next Story