Categories: latest news

லப்பர் பந்து பட நடிகையை எங்கேஜ்மென்ட் செய்த ‘அண்ணா’ சீரியல் நடிகர்… வைரல் போட்டோஸ்..!

சமீப நாட்களாக சின்னத்திரையில் இருக்கும் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திடீரென்று புகைப்படங்களை வெளியிட்டு திருமணம் தொடர்பான அறிவிப்பை கூறிவிடுகிறார்கள். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி விடுகின்றது. சமீபத்தில் கூட சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் வெற்றி வசந்த் பொன்னி சீரியல் கதாநாயகி வைஷ்ணவியை காதலிப்பதாக அறிவித்து நிச்சயதார்த்தம் செய்திருந்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தது. அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு ஜோடி தங்களது காதலை அறிவித்திருக்கிறார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் கன்னத்தில் முத்தமிட்டால். இந்த சீரியலை செந்தில்குமார் என்பவர் இயக்கியிருந்தார். இதில் மணிஷாஜித், திவ்யா பத்மினி மற்றும் சந்தோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த சீரியல் ‘துஜ்சே ஹை ராப்தா’ என்கின்ற ஹிந்தி சீரியலை தழுவி தமிழில் எடுக்கப்பட்டது. சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிக்கப்பட்டது. இந்த சீரியல் கதாநாயகனாக நடித்து வந்த சந்தோஷ் அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது அந்த சீரியலில் இருந்து விலகிய சந்தோஷ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர் பிளாக் ஷீப் வீடியோக்கள் மற்றும் கனாக்காணும் காலங்கள் போன்றவற்றில் நடித்து பிரபலமான மௌனிகாவை பல வருடங்களாக காதலித்து வந்தார். நடிகை மௌனிகா வெள்ளித்திறையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற லப்பர் பந்து என்கின்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர்கள் இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இவர்களின் எங்கேஜ்மென்ட் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராம் சுதன்

Recent Posts

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

20 minutes ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

49 minutes ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

3 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

6 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

18 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

19 hours ago