விஷால் படம் அளவு கூட இல்லையே... விடாமுயற்சி..! பொளந்து கட்டிய பிரபலம்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், ஆரவ், திரிஷா, அர்ஜூன் நடித்த விடாமுயற்சி படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத்துக்கு நேற்று வெளியானது. முதல் நாள் என்பதால் ரசிகர்கள் பரபரப்பாக பார்ப்பதற்கு தியேட்டருக்குச் சென்றனர். படத்தின் வசூலும் பெரிய அளவில் வரவில்லை. தமிழகம் முழுவதும் 30 கோடி என்கிறார்கள்.
தேவையில்லாத மொக்கை: அதே சமயம் படத்தை அஜர்பைஜானில் தான் எடுத்துள்ளார்கள். அது எதுக்கு? தேவையே இல்லை. அதுக்கு நம்மூரு மலைக்காட்டுல எடுத்துருக்கலாம். தேவையில்லாத மொக்கை சீன்கள் இருக்கு என பிரபல சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறனும் தெரிவித்து இருந்தார்.
நெகடிவ் விமர்சனங்கள்: அந்த வகையில் வழக்கமான அஜீத் படம் மாதிரி இது இருக்காது என முன்பே மகிழ்திருமேனி சொல்லி இருந்தார். அது அப்படியே பலித்து விட்டது. இது விஷால் படம் அளவு கூட இல்லையே அந்தனன் கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
விடாமுயற்சி படத்தைப் பற்றி நெகடிவ் விமர்சனங்கள் நிறைய வர ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனனும் வரிந்து கட்டிக் கொண்டு சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
அடி வாங்கற ஹீரோ: படத்தோட ஆரம்பத்துல ஒரு கைதட்டல் வந்தது. அதுக்கு அப்புறம் அது எங்கேயுமே இல்லை. அஜீத்துன்னா அவருதான் அப்படிங்கற இடத்துல எவ்வளவு பெரிய ரசிகர்கள் இருக்காங்க. கொண்டாடுறாங்க. இப்படி ஒரு ஹீரோவைக் கொண்டாந்து படம் முழுக்க அடி வாங்க வச்சிக்கிட்டே இருந்தா அதை எப்படி படம்னு எடுத்துக்க முடியும்?
என்னத்தையாவது பண்ணிட்டுப் போங்க: அந்தப் பொண்ணுதானே தொலைஞ்சா நமக்கு என்னன்னு உட்கார்ந்துருக்கோம். இவருதானே தேடுனா நமக்கு என்னன்னு உட்கார்ந்துருக்கோம். இப்படி ஒரு உணர்வை எந்தப் படமுமே கொடுக்கல. ஏதாவது இந்தப் படத்துல இருக்கா? என்ன நடக்கப்போகுதுன்னே தெரியல. என்னய்யா இந்தப் படத்துல என்னத்தையாவது பண்ணிட்டுப் போங்கய்யான்னு உட்கார்ந்துருக்காங்க ரசிகர்கள்.
ஆரம்பத்துல ஒரு கைதட்டல் இருந்தது. அப்படியே அது எங்கேயுமே இல்ல. பைட் சீன் கூட ஒரு விஷால் படத்துல இருக்குற அளவுக்குக்கூட இல்லையே. அந்தக் கம்போசிங் கூட ரொம்ப சுமாராகத்தான் இருந்தது என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன்.